YouTurn

விலை குறைந்த இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

விலை குறைந்த இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது ’Indian Oil’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ சேர்க்கைப் பொருட்கள் கலந்த LPG வகை சிலிண்டர்கள் தான். இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் அல்ல.

பரவிய செய்தி

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரான 18 கிலோ எடை கொண்ட இந்த இயற்கை எரிவாயு சிலிண்டர் வெறும் 500 ரூபாய். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மாட்டுச் சாணத்திலிருந்து (Gobar Gas) இயற்கை எரிவாயுவை சேமித்து சிலிண்டர்களில் அடைக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். 


Facebook Link

விரிவான விளக்கம்

நீல நிறத்தில் இருக்கும் சிலிண்டர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றும் வீடியோயில் ’இந்த சிலிண்டர்களில் இருப்பது மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Gobar Gas) என்றும், 18 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரின் விலை வெறும் 500 ரூபாய் மட்டுமே’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இதானை விற்பனை செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இந்த எரிவாயு இருக்குமென்று கூறி தமிழ்நாட்டில் தற்சார்பு வாழ்க்கை பற்றி பேசும் பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பரப்புகிறார்கள். 



உண்மை என்ன?


இது குறித்து இணையத்தில் தேடியபோது, இந்த சிலிண்டர் இயற்கை எரிவாயு சிலிண்டர் அல்ல, ’Indian Oil’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ’Indane XTRATEJ’ வகை LPG சிலிண்டர் என்பது தெரிய வருகிறது. 


image.png


இது குறித்து  ’Indian Oil’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில், ‘இது மற்ற LPG சிலிண்டர்களில் இருந்து வித்தியாசமானது (differentiated) என்றும், அதில் நானோ அளவிலான சில சேர்க்கைப் பொருட்கள் (nano-additive) உள்ளதாகவும்’ குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இது மற்ற LPG சிலிண்டர்களை விட 65 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பத்தை உருவாக்க வல்லது. இதனால், 5 சதவீதம் வரை எரிவாயு சேமிக்க முடியும்  என்றும், 14 சதவீதம் வரை சமையல் நேரத்தை குறைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, பரப்பப்படும் வீடியோவில் உள்ள சிலிண்டர்கள் ’Indian Oil’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட  நானோ சேர்க்கைப் பொருட்கள் கலந்த LPG சிலிண்டர் தான் என்பது உறுதியாகிறது.


முடிவு:


நானோ சேர்க்கைப் பொருட்கள் கலந்த LPG சிலிண்டர்களை இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் என்று இணையத்தில் தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க