யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இவை விற்பனைக்காக செய்யப்பட்டவை அல்ல. இவை போன்ற வீடியோக்கள், வெறும் பொழுதுபோக்கு நோக்கில், பார்வையாளர்களை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுபவை. மேலும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளவை துளசி மாலைகள் அல்ல.
பரவிய செய்தி
தெய்வங்களின் கழுத்திலும், தனது சொந்த கழுத்திலும் சூடிக்கொண்டால் என்ன நடக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். இந்த பேய்களிடமிருந்து எதையும் வாங்காதீர்கள். இந்த பேய்கள் நமது மதத்தையும் கலாச்சாரத்தையும் அழித்துவிட்டன. இந்த பேய்கள் எலும்புகளிலிருந்து துளசி மாலைகளை கூட செய்துள்ளன உஷார்.
விரிவான விளக்கம்
“எலும்புகளிலிருந்து துளசி மாலைகளை செய்யும் இஸ்லாமியர்கள். தெய்வங்களின் கழுத்திலும், தனது சொந்த கழுத்திலும் இவற்றை சூடிக்கொண்டால் என்ன நடக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் ஒரு குழுவினர் இயந்திரங்களைப் பயன்படுத்தி எலும்புகளிலிருந்து காதணிகள் மற்றும் நெக்லஸ் செய்வதை தெளிவாகக் காண முடிகிறது.
தெய்வங்களின் கழுத்திலும், தனது சொந்த கழுத்திலும் சூடிக்கொண்டால் என்ன நடக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். இந்த பேய்களிடமிருந்து எதையும் வாங்காதீர்கள். இந்த பேய்கள் நமது மதத்தையும் கலாச்சாரத்தையும் அழித்துவிட்டன. இந்த பேய்கள் எலும்புகளிலிருந்து துளசி மாலைகளை கூட செய்துள்ளன உஷார். pic.twitter.com/dzirTxnWI7
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ “Smart Workers“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இவை விற்பனைக்காக செய்யப்பட்டவை அல்ல. இவை போன்ற வீடியோக்கள், வெறும் பொழுதுபோக்கு நோக்கில், பார்வையாளர்களை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுபவை. மேலும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளவை துளசி மாலைகள் அல்ல.
இவர்கள் பக்கத்தில், பரவி வரும் வீடியோவைப் போன்றே, “மாற்று வழிகளில் தொழில்கள் செய்வது எப்படி என்பதை நோக்கமாக கொண்டு” பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. மேலும் தங்களுடைய வீடியோவிற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சுகாதாரமற்ற முறையில் பல உணவு பொருட்களை தயாரிப்பது போன்றும் இவர்கள் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இந்நிலையில், எலும்புகளிலிருந்து துளசி மாலைகளை செய்யும் இஸ்லாமியர்கள் என்று கூறி பரவி வரும் வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், எலும்புகளிலிருந்து துளசி மாலைகளை செய்யும் இஸ்லாமியர்கள் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறாக திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.