YouTurn

முஸ்லீம் ஆணும், பெண்ணும் அயோத்தி ராமர் கோயிலுக்கு யாத்திரை செல்வதாகப் பரவும் போலி வீடியோ !

முஸ்லீம் ஆணும், பெண்ணும் அயோத்தி ராமர் கோயிலுக்கு யாத்திரை செல்வதாகப் பரவும் போலி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

முஸ்லீமா பொறந்து இந்து தெய்வத்தை மனதார வணங்கும் இது போன்றவர்களும் இங்கு இருக்கும் நிலையில், இந்துவா பொறந்து சில திராவிட கழிசடைகளின் மேடை பேச்சை கேட்டுகொண்டு, நீங்க ஏனடா 200 ரூவா கொத்தடிமையா இருந்துகிட்டு எங்க தெய்வத்தை நிந்திக்கிறீங்க உபிகளா?

Facebook link 

விரிவான விளக்கம்

னவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா முடிவடைந்த பிறகும், அது தொடர்பான போலிச் செய்திகள் நின்றபாடில்லை. இந்நிலையில், முஸ்லீமாக இருந்து இந்து தெய்வத்தை மனதார வணங்குகிறார்கள் எனக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில், முஸ்லீம் பையனும், பெண் ஒருவரும் அயோத்தி ராமர் கோயில் இடம்பெற்ற பேனர் மற்றும் காவிக் கொடியுடன் காலில் செருப்பு இன்றி யாத்திரை செல்லும் காட்சியும், தரையில் துணியை விரித்து அதன் மீது படுத்து வணங்கும் காட்சிகளும், அவர்களுடன் வீடியோ எடுப்பவர் பேசுவது போன்றும் இடம்பெற்று உள்ளன.



X post link | Archive link 



உண்மை என்ன ? 

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜனவரி 23ம் தேதி Solanki Bhai Prank எனும் ஃபேஸ்புக் பக்கத்தில், "அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் முஸ்லீம் சிறுவனும் சிறுமியும் " எனும் தலைப்பில் இதன் முழுமையான வீடியோ பதிவாகி இருக்கிறது.



Facebook link | Archive link 

அதே ஃபேஸ்புக் பக்கத்தில், ஜனவரி 22ம் தேதி பதிவிட்ட வீடியோவில் வேறொரு முஸ்லீம் பெண் அதே பேனர் மற்றும் காவிக் கொடியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதாக இடம்பெற்று இருக்கிறது. இவ்விரு வீடியோவும் ஒரே இடத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்கின்றன.



இரண்டும் வீடியோவின் இறுதியிலும் வீடியோ எடுக்கும் நபர் யாத்திரை செல்வதாகக் கூறும் நபர்களுக்கு பணம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில், இதேபோன்று சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட வேறு சில வீடியோக்களும் இடம்பெற்று உள்ளன.



இவ்வீடியோக்களை வெளியிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில், யூடியூபர், பிராங் ஸ்டார் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மில்லியன் கணக்கில் பார்வைகளை பெறுவதால் வடஇந்தியாவில் இவ்வாறான போலியாக சித்தரிக்கப்பட்டு பல்வேறு வீடியோக்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாகவும், இதுபோல் போலியாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : ஆசிரியர் மாணவியைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

மேலும் படிக்க : பாஜகவைச் சேர்ந்தவர் தனது இரண்டு மகள்களைத் திருமணம் செய்ய முயன்றதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், முஸ்லீம் ஆணும், பெண்ணும் அயோத்தி ராமர் கோயிலுக்கு யாத்திரை செல்வதாகப் பரப்பப்படும் வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க