YouTurn

மும்பை ராம் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் காட்சி எனப் பரவும் ஹைதராபாத்தின் பழைய வீடியோ!

மும்பை ராம் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் காட்சி எனப் பரவும் ஹைதராபாத்தின் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மும்பையில் கடந்த 22ம் தேதி ராம் யாத்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று வீட்டில் இருந்து இழுத்து வந்து லாடம் கட்டப்பட்டனர். மேலும் 1000 முறை ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.   

X link

விரிவான விளக்கம்

னவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஜனவரி 21ம் தேதி இரவு மும்பை மீரா சாலையில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகச் சொல்லப்பட்டதையடுத்து, கல்வீச்சு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். பின்னர் அச்சாலை ஓரம் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறி முஸ்லீம்களின் கடைகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. 

கடந்த 21ம் தேதியன்று காவிக்கொடி கட்டப்பட்டிருந்த வாகனங்கள் அச்சாலையில் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் நடந்ததும், அதைத் தொடர்ந்து 22ம் தேதி நடைபெற்ற பேரணியில் சர்ச்சை ஏற்பட்டதும் உண்மைதான். ஆனால், கல் வீச்சு சம்பவம் எதுவும் நடக்கவில்லையென காவல்துறை துணை ஆணையர் ஜெயந்த் பஜ்பலே கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து மற்றும் முஸ்லீம் என இரு தரப்பைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் ராம் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்களை வீட்டில் இருந்து இழுத்து வந்து காவல் துறையினர் அடித்ததாகவும் 1000 முறை ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்ல வைத்ததாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.  



உண்மை என்ன ?

மும்பை மீரா சாலை விவகாரத்துடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படுகிற வீடியோ கீஃபிரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அதே வீடியோவை 2022, ஆகஸ்ட் 24ம் தேதி 'யூனுஸ் லசானியா' என்னும் பத்திரிகையாளர் அவரது X (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



அதில், ராஜா சிங் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதற்காக ஷாலிபண்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்ததால், ஹைதராபாத் காவல் துறையினர் வீடுகளுக்குள் நுழைந்து போராட்டக்காரர்களைக் கைது செய்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பதிவில் ‘Siasat’ தளத்தின் செய்தி லிங்க்கையும்  இணைத்துள்ளார். அச்செய்தியில் பரவக் கூடிய வீடியோவில் உள்ள ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது. 



2022 ஆகஸ்ட் மாதம் தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவரை கைது செய்ய வலியுறுத்தி ஹைதராபாத் காவல் ஆணையர் அலுவலகத்தை இஸ்லாமியர்கள் சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோதான் இது. 

மேலும் படிக்க : மும்பை மீரா சாலையில் ராம பக்தர்களை தாக்கியவர்களை காவலர்கள் தாக்குவதாகப் பரவும் பொய்!

இந்நிகழ்வு குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது மும்பை மீரா சாலை சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

முடிவு: 

நம் தேடலில், மும்பையில் ராம் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டில் இருந்து இழுத்து வந்து லாடம் கட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. வீடியோவில் உள்ள சம்பவம் 2022ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க