யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையாக நடந்த சம்பவம் என்று கூறி தவறாக பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
வாரணாசி கிருஷ்ண ஜென்மஸ்டமி pic.twitter.com/nwNaGSIdn3
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Rising Rastra Tv என்ற யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 7, 2025 அன்றே பதிவாகியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இது கிருஷ்ண ஜெயந்தி முன்பே இருந்து பரவி வருவது உறுதியானது.
இதையடுத்து இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததது. அதை அறிய பரவி வரும் விடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இது 99.4% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது.

இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் ரயில்கள் எனப் பரவும் AI புகைப்படங்கள்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்!
முடிவு:
நம் தேடலில், வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனை உண்மையாக நடந்த சம்பவம் என்று கூறி தவறாக பரப்புகின்றனர்.
