YouTurn

இந்துமத பக்திப் பாடல் பாடும் பிரபல பாடகர் முகமது ரஃபியின் மகள் எனப் பரவும் வதந்தி !

இந்துமத பக்திப் பாடல் பாடும் பிரபல பாடகர் முகமது ரஃபியின் மகள் எனப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் இந்த பெண் யார் தெரியுமா. ஆம் தெரிந்ததும் பெரிதும் வியப்படைவீர்கள். இவர் காலம்சென்ற, பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகர் முகமது ரஃபியின் மகள். ஒரு இந்துப் பெண் போல உடை அணிந்துள்ளார். நமது பெண்கள் வெட்கப்படுகிறார்கள். ஃபேஷன் என்ற பெயரில் நமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கும் இந்துப் பெண்கள், இவரிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

பிரபல இந்திப் பாடகர் முகமது ரஃபியின் மகள் ஹரிநாம சங்கீர்த்தனம் பாடுவதைப் பாருங்கள் என்று கூறி, பெண் ஒருவர் மேடையில் பாடல் பாடுவது போன்ற 4:15 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ "இந்திப் பாடகர் முகமது ரஃபியின் மகள் இவர் தான்" என்று கூறி கடந்த 2018 இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.



பரவி வரும் வீடியோவில் இருப்பவர் குறித்து இவருடைய சமூக ஊடகப் பக்கங்களில் தேடியதில், இவருடைய பெயர் கீதாஞ்சலி ராய் என்பதும், இவர் ஒரு பாடகர் என்பதும் உறுதியானது. மேலும் பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதியும், இவருடைய Gitanjali Rai Official Channel என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2013 இல் வெளியாகி இருக்கிறது.



மேலும் அவருடைய அதே யூடியூப் பக்கத்திலேயே, கடந்த 2019 ஆகஸ்ட் 11 அன்று "கீதாஞ்சலி ராய் முகமது ரஃபிஸ் பேத்தியா?.. நேர்காணல் பகுதி II" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நேர்காணல் செய்யும் நபர் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "நான் முகமது ரஃபியின் பேத்தி கிடையாது. அப்படி இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். அவருடைய ரசிகை நான். கல்லூரி முடித்துவிட்டு ஒருநாள் வீட்டுக்கு வந்தபோது தான் சொன்னார்கள் அவர் இறந்துவிட்டதாக. நான் அதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்" என்று பேசியிருப்பதைத் தெளிவாகக் காணலாம். 



மேலும் படிக்க: ஜாக்கிசான் தனது மகளுக்கு அவரது வாழ்க்கை சம்பவங்களை காட்டுவதாக தவறாகப் பரவும் திரைப்படத்தின் காட்சி !

மேலும் படிக்க: விதவையாக இருந்த ராஜாஜியின் மகளுக்குக் காந்தியிடம் பேசி அவரது மகனைத் திருமணம் செய்து வைத்தவர் பெரியார் எனப் பரவும் பொய் !

முடிவு :

நம் தேடலில், பிரபல இந்திப் பாடகர் முகமது ரஃபியின் மகள் ஹரிநாம சங்கீர்த்தனம் பாடுவதாகக் கூறி பரவி வரும் தகவல்கள் தவறானவை. வீடியோவில் இருப்பது முகமது ரஃபியின் மகள் கிடையாது. அவர் பெயர் கீதாஞ்சலி ராய்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க