YouTurn

மோடிக்கு பிரான்ஸ் அதிபர் கை கொடுக்காமல் அவமதித்தாரா? உண்மை என்ன?

மோடிக்கு பிரான்ஸ் அதிபர் கை கொடுக்காமல் அவமதித்தாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மாநாடு நடந்த அரங்கிற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருகைதந்துள்ளனர். எனவே அரங்கில் சந்தித்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு மட்டும் கை கொடுத்து வரவேற்றுள்ளார்.

பரவிய செய்தி

அசிங்கப்பட்டான் தாடிக்காரன் 

X link

விரிவான விளக்கம்

பிரான்சில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கை கொடுக்காமல் அவமதித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

இந்தியப் பிரதமர் பிரான்சில் நடைபெறும் AI மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாகச் செய்திகளைத் தேடி ஆராய்ந்தோம். பிரான்ஸ் சென்றுள்ள மோடியை இமானுவேல் வரவேற்கும் வீடியோ அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியை பாரீஸ் நகரத்துக்கு வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேற்கொண்டு AI மாநாட்டு அரங்கில் மோடிக்கு மட்டும் ஏன் இமானுவேல் கை கொடுக்கவில்லை என்பது குறித்துத் தேடினோம். ‘Firstpostஊடகம் மாநாட்டின் முழு வீடியோவை பதிவிட்டுள்ளது. அதில், மோடியும் இமானுவேலும் ஒன்றாக அரங்கிற்கு வருதை காண முடிகிறது. முன்னதாக இருவரும் கை கொடுத்தபடி ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பதையும் காணலாம். 



பிறகு அரங்கிற்குள் வந்ததும் புதிதாகச் சந்தித்த பிறநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விதமாக கை கொடுத்துள்ளார் இமானுவேல். மாநாடு தொடர்பாக மோடியின் எக்ஸ் பக்க பதிவிலும் இருவரும் ஒன்றாக கை கொடுத்துகொண்டு இருக்க கூடிய படத்தினை பார்க்க முடிகிறது.

மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவின் சிறு பகுதியை மட்டும் கொண்டு மோடி அவமதிக்கப்பட்டதாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. 

முடிவு: 

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இந்தியப் பிரதமர் மோடிக்கு கை கொடுக்காமல் அவமதித்ததாகப் பரவும் தகவல் தவறானது. மாநாடு நடந்த அரங்கிற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருகைதந்துள்ளனர். எனவே அரங்கில் சந்தித்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு மட்டும் கை கொடுத்து வரவேற்றுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…