YouTurn

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவிற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை எனப் பொய் பரப்பிய சவுக்கு சங்கர் !

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவிற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை எனப் பொய் பரப்பிய சவுக்கு சங்கர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை - சவுக்கு சங்கர்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மார்ச் 1ம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜெஷ்வி யாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/Veera284/status/1630765734782722049

ஆனால், திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரி கட்சிகள், வைகோ, கூட்டணியிலுள்ள மூத்த தலைவர்கள் மற்றும் வட தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் திருமாவளவன் ஆகியோர் அழைக்கப்படவில்லை.

நேற்றைய தினம் நடந்த கண்டன கூட்டத்தில் திருமாவளவன், தமிழ்நாடு காவல் துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா எனப் பேசியிருந்தார் இதனைத் தொடர்ந்துதான் அழைக்கவில்லை என்பது போல சவுக்கு சங்கர் அழைப்பிதழ் ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன ? 

சவுக்கு சங்கர் பதிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.திருமாவளவன் டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். மார்ச் 1ம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார். அப்படத்தில் முதல் வரிசையில் திருமாவளவன் அமர்ந்துள்ளதைக் காண முடிகிறது.  

https://twitter.com/thirumaofficial/status/1630993727107010560?t=QjVWlz_M4qI71njOxTIucw&s=08

Archive link 

அவருக்கு அருகில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரும் அதே வரிசையில் அமர்ந்துள்ளதையும் காண முடிகிறது.

மேற்கொண்டு தேடியதில், மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்திலும் பிறந்தநாள் விழா புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ மற்றும் ஏனைய கூட்டணி தலைவர்கள் இருப்பதைக் காண முடிகிறது.  



Twitter link 

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருந்த பிறந்தநாள் விழா குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் வெளியான செய்தியிலும் 'கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளது. 



Archive link 

சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள அழைப்பிதழிலும் வாழ்த்துக் கூறுபவர்கள் என்றுதான் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என்ற முறையில் எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து மாநில முன்னேற்றத்தைத் தடுக்க முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அக்கூட்டத்தில் டாக்டர்.திருமாவளவன், “தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் வீரமணி அவர்களது காரினை மறித்துக் கொண்டு வன்முறை செய்ய முயல்கிறார்கள். இதனைப் பார்க்கும் போது தமிழ்நாடு காவல் துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமே தவிர, அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது. அதிமுக வேண்டுமானால் அமித்ஷாவின் கட்டுப்பாட்டிற்கு ஆடலாம், ஓடலாம்” எனப் பேசி இருந்தார்.

திருமாவளவன் இப்படிப் பேசியதை வைத்துக் கொண்டு, அவர் மு.க.ஸ்டாலினுடைய பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்ற ஒரு தவறான தகவலைச் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், கூட்டணி கட்சியினர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை சவுக்கு சங்கர் கூறியது உண்மை அல்ல. வைகோ, தொல்.திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் இதர கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க