YouTurn

அமைச்சர்களின் மொபைல் எண்களை பொதுவில் வெளியிடும் நடைமுறை தவெக அரசு புதிதாக கொண்டுவந்துள்ளதா?

அமைச்சர்களின் மொபைல் எண்களை பொதுவில் வெளியிடும் நடைமுறை தவெக அரசு புதிதாக கொண்டுவந்துள்ளதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடப்படும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு!

இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!


image.png


Facebook Link


விரிவான விளக்கம்

விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுக் கொண்டத்திலிருந்து பல புதிய திட்டங்கள், நடைமுறைகள் அறிவிக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதில், பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் தான் என்று நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறோம். 


இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்து அமைச்சர்களின்  மொபைல் எண்களும் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இனி பொதுமக்கள் அமைச்சர்களிடமே நேரடியாக புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அந்த புகார்களை அந்தந்த அமைச்சகத்தின் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கையாள்வார்கள் என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


அமைச்சர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். தமிழ்நாடு சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், 17ஆவது சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 


image.png


முதல்வர் விஜய்-ன் அலைபேசி எண் மட்டும் வெளியிடப்படவில்லை. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 6 தொகுதிகள் காலியாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. 


மேலும் தேடியபோது, திமுக ஆட்சியில் இருந்தபோது 16ஆவது சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரின் அலைபேசி எண்களும் வெளியிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. இதிலும், T.K. அமுல் கந்தசாமி, K. பொன்னுசாமி ஆகியோர் இறந்து போன காரணத்தாலும், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் ராஜினாமா செய்ததாலும் அவர்களது விவரங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. 


image.png


மேற்கூறிய விவரங்களிலிருந்து, அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடப்படும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது.


முடிவு:


அமைச்சர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்தே பின்பற்றப்பட்டு வருவதை மறைத்து, தற்போது தவெக அரசு தான் இந்த நடைமுறையை புதிதாக கொண்டு வந்ததாக தவறாக பரப்பப்படுகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க