YouTurn

ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பேசிய காணொளி எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்புகின்றனர்.

ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பேசிய காணொளி எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்புகின்றனர்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

“சோலி கே பீச்சே” என்ற பாடலை சிவன் அல்லது வைணவ கோயில்களில் பாட முடியுமா என்று ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசிய காணொளியை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

"சைவ, வைணவ கோவில்களில் ஜோலிகே பீச்சே க்யா ஹனா பாட முடியும்??" இந்த முறை எ.வ.வேலு (வஜ்ஜிரவேலுவின்) ஆபாச பேச்சு. பீமுக கட்சியே கழிசடை சாக்கடையின் கூடாரம் தான்


image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சிவன், வைணவ கோவில்களில் “சோலி கே பீச்சே” என்ற பாடலை பாட வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு கூறியதாக 10விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று பரவி வருகிறது. பொன்முடிக்கு அடுத்து ஏ.வ.வேலு ஆபாசமாகப் பேசுவதாகக் கூறி பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன ? 

பரவி வரும் காணொளியின் உண்மைத் தன்மையை அறிய, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ஏப்ரல் 10ஆம் தேதி புதிய தலைமுறை செய்தி தனது யூடியூப் பக்கத்தில், "நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்.. அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்பு | Kanchipuram" என்ற தலைப்பில் அமைச்சர் பேசியதை நேரலையாக வெளியிட்டிருந்தனர். 


அதில் அமைச்சர் பேசியது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது சரியாக 28:25 பகுதியில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கை குறித்துப் பேசுகிறார். மேலும், இருமொழிக் கொள்கையினால் தான் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என்று கூறிவிட்டு மும்மொழிக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஹிந்தி திணிப்பு குறித்துப் பேசுகிறார். 


தொடர்ந்து 34: 33வது நிமிடத்தில் ஹிந்தி திணிப்பு குறித்து விளக்கம் அளிக்கும் அமைச்சர்,  “கோயிலுக்குச் செல்கிறோம். அங்கு ஆழ்வாராக இருந்தால் 4000 திவ்ய பிரபந்தத்தைத் தமிழில் தான் பாடுகிறார்கள். சைவக் கோயில் எங்கிருந்தாலும் அங்குத் தேவாரமும் திருவாசகமும் தமிழில் தான் பாடப்படும்” என்கிறார். தொடர்ந்து, “சிவன் கோவிலிலும் வைஷ்ணவ கோவிலிலும் “சோலி கே பீச்சே” என்ற பாட முடியுமா. பிறகு எதற்கு எங்களை ஹிந்தி மொழி படிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்” என்கிறார். 

இது குறித்த செய்தி வேறு எங்கும் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கையில், பாலிமர் செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்.. அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு | EV Velu Speech | Meeting" அமைச்சர் பேசியதை நேரலை செய்திருந்தனர். அதில் சரியாக 27:58வது நிமிடத்தில் ஹிந்தி திணிப்பு குறித்துப் பேசியது இடம் பெற்றிருந்தது. 


முடிவு : 

“சோலி கே பீச்சே” என்ற பாடலை சிவன் அல்லது வைணவ கோயில்களில் பாட முடியுமா என்று ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசிய காணொளியை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.