யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக MLA தென்றல் குமார் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த சொத்து விவரங்களின் படியே அவருக்கு 2.8 கோடியில் சொத்துகள் உள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. தவெக கட்சியின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வைத்தினன்குப்பம் (K.V. குப்பம்) என்ற தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கிறார் தென்றல் குமார்.
இந்நிலையில், ’News தமிழ்’ செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் MLA தென்றல் குமார் ’தனக்கென சொந்தமாக கார் இல்லை, அதனால் தான் பேருந்தில் சட்டமன்றம் செல்கிறேன்’ என்று கூறுயிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்து ’News தமிழ்’ செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த வீடியோவை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏 pic.twitter.com/s14ll6SxPE
உண்மை என்ன?
சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் குறித்த இணையத்தில் தேடியபோது ‘The Hindu’ செய்தித்தளத்தில் ஒரு செய்திக் குறிப்பைக் காணமுடிந்தது. அதில் தென்றல் குமார் VT Traders (Prop) மற்றும் Lakshmi Construction என்ற நிறுவனங்களில் பங்குதாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் சமர்ப்பித்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, தென்றல் குமாருக்கு 2.8 கோடியில் சொந்து இருப்பதாகவும், 42 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆண்டு வருமானம் 8.3 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தென்றல் குமார்-ன் சொந்து விவரங்களின் படி, அவரிடம் 2 லட்சம் மதிப்பிலான Royal Enfield Bike இருக்கிறது, 13 லட்சம் மதிப்பிலான 13 சவரன் நகை இருக்கிறது. மேலும் அவரது துணைவியாரின் பெயரில், 1 கோடி 26 லட்சம் மதிப்புள்ள 126 சவரன் நகையிருக்கிறது. 25 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ வெள்ளி இருக்கிறது என்று தெரிய வருகிறது.

தென்றல் குமார் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த சொத்து விவரங்களின் படியே அவருக்கு இவ்வளவு சொத்துகள் இருப்பது தெரியவருகிறது. ஆனால் தன்னிடம் கார் இல்லை என்று ஊடகத்தில் திரிக்கப்பட்ட தகவலை கூறியுள்ளார்.
முடிவு:
2.8 கோடி மதிப்பில் சொத்துகளைக் வைத்துக் கொண்டு தன்னிடம் கார் இல்லை, சட்டமன்றத்திற்கு பேருந்தில் தான் வருகிறேன் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் திரிக்கப்பட்ட தகவலை ஊடகத்திடன் சொல்கிறார். அதனை தவெக ஆதரவாளர்களும் பரப்பி வருகிறார்கள்.
