யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த தவறான வீடியோவை Times Now, Mint, Oneindia Hindi, News18 தமிழ்நாடு மற்றும் NDTV போன்ற முக்கிய ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டஸ் பிரண்ட்’ பொறுப்பேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டார். இந்நிலையில் லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை Times Now, Mint, Oneindia Hindi, News18 தமிழ்நாடு மற்றும் NDTV போன்ற முக்கிய ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
वायरल हुआ लेफ्टिनेंट विनय नरवाल का आखिरी वीडियो,पहलगाम आतंकी हमले से पहले किया था शेयर
#JammuAndKashmir #pahalgam #PahalgamTerrorAttack #PahalgamAttack #terrorattack pic.twitter.com/uTMZfvjNAw
காஷ்மீரில் இருந்து லெப்டினன்ட் வினய் நர்வாலின் கடைசி வீடியோ.
#PahalgamTerroristAttack pic.twitter.com/mM9RiILdAa
விரைவில், இதற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்தே தீரும்...
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பவர்கள் இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் வினய் நர்வால் மற்றும் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் தேடியபோது இன்ஸ்டாகிராம் பிரபலங்களான ஆஷிஷ் செஹ்ராவத் மற்றும் யாஷிகா சர்மா ஆகியோரின் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அதில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு ஏப்ரல் 24 அன்று வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
அதில், “தங்களது வீடியோ நர்வால் தம்பதியினரின் கடைசி வீடியோ என்று கூறி தவறாக பரப்பப்படுகிறது. இவ்வாறு பல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் தவறாகப் பரவியதையடுத்து, எங்களுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கிவிட்டோம். தவறான செய்திகளை பரப்புவர்கள் மீது புகார் அளிக்கப்படும்” என்றும் கூறியிருந்தனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பிரபலங்களான ஆஷிஷ் செஹ்ராவத் மற்றும் யாஷிகா சர்மா ஆகியோரின் வீடியோவை, இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி Times Now, Mint, Oneindia Hindi, NDTV, News18 தமிழ்நாடு உட்பட பல ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், லெப்டினன்ட் வினய் நர்வால் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வாலுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி பரவி வரும் வீடியோ தவறானது என்பதை அறிய முடிகிறது.