YouTurn

நடிகை திரிஷாவுக்கு திருமணம் என்று செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

நடிகை திரிஷாவுக்கு திருமணம் என்று செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் இந்த செய்தி குறித்து நடிகை த்ரிஷாவே மறுப்பு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் வாழ்க்கைய மத்தவங்க முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

பரவிய செய்தி

Claim 1 : நடிகை திரிஷாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்

image.png

Website Link  | Archived Link


Claim 2 : த்ரிஷாவுக்கு டும் டும் டும்? பஞ்சாப் மாப்பிள்ளையா.. வைரலாகும் செய்தி!

image.png

Website Link  | Archived Link


Claim 3 : படு வைரலாகும் திரிஷாவின் திருமண செய்தி - மாப்பிள்ளை இவரா? 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 


உண்மை என்ன? 


நடிகை திரிஷாவுக்கு திருமணம் என்பது உண்மை தானா என்பதை அறிய, அவரது சமூகவலைதளங்களில் பக்கங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை ஆய்வு செய்தோம். அப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் செய்தி குறித்து ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்  "என் வாழ்க்கைய மத்தவங்க முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்படியே HONEYMOON செல்வதை பற்றியும் சொன்னால் நல்லது" என்று  குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அவரது திருமணச் செய்தி வதந்தி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. 



அதே போல் ”ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணம்?” என்ற தலைப்பில் மாலைமலர் ஊடகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் தகவல் குறித்து திரிஷாவின் தாயாரிடம் கேட்டதாகவும், அவரும் இது அடிக்கடி வரும் தகவல்கள் தான். இதில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 


நம் தேடலில், நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் என்று ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானவை. பரவி வரும் இந்த செய்தி குறித்து நடிகை த்ரிஷாவே மறுப்பு தெரிவித்துள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க