YouTurn

மஞ்சும்மல் பாய்ஸ்’ படக் குழுவினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகப் பரவும் பொய் !

மஞ்சும்மல் பாய்ஸ்’ படக் குழுவினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான Manjummel Boys த்திரைப்படக் குழுவினரை தலைமை செயலகம் வரவழைத்து பாராட்ராப்ள… சினிமான்னா உதய்க்கு தனி பாசம் தான் 

Facebook link

விரிவான விளக்கம்

சிதம்பரம் என்பவரின் இயக்கத்தில் மலையாளத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகி மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்பட குழுவினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 


Facebook link


இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் தேடினோம். மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 



மேற்கொண்டு அவரது எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்ததில், அதே அரங்கில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களையும் காண முடிந்தது. கடந்த (2023) டிசம்பர் மாதம் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல் படங்கள் அவரது பக்கத்தில் உள்ளது. 

அந்த அறையில் ஒரு பக்கம் கலைஞர் மற்றும் தயாளு அம்மாள் படமும் இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் படமும் இருப்பதைக் காண முடிகிறது. தலைமைச் செயலகத்தில் குடும்ப புகைப்படங்கள் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை. 



தமிழ்நாடு அமைச்சர்களுக்கு அரசு சார்பில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பங்களாக்கள் வழங்கப்படுவது வழக்கம். அப்படி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குறிஞ்சி இல்லம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அரசு அலுவல்கள் மட்டுமின்றி அவர்களது தனிப்பட்ட சந்திப்புகளும் நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். அப்படித்தான் மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினரையும் சந்தித்துள்ளார். 



உதயநிதி ஸ்டாலின் அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினரைச் சந்தித்ததைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர். 

முடிவு : 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட குழுவினரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள குறிஞ்சி இல்லம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க