YouTurn

தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாக பரவும் மலேசியா வீடியோ!

தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாக பரவும் மலேசியா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது மலேசியாவில் கடந்த 2024-ல் எடுக்கப்பட்ட வீடியோ. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போன்று தவறாகத் திரித்துப் பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

சமீபத்தில் தமிழ்நாட்டு பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து கேவலப்படுத்திய அதே பார்ப்பார கும்பல்தான்.. இப்ப மூஞ்ச பாருங்களேன்.

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் ஆபாசமாக நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து விளையாடுவது போன்ற காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி, கடுமையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில் தமிழ்நாட்டு பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்துவிட்டு, வெளிநாட்டு பக்தர்களை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள் என்று கூறி இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது nazaninamiri_official என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் டிசம்பர் 23, 2024 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


அந்த வீடியோவின் caption-ல் பூசாரியிடம் ஆசிப்பெற்றதாகவும், கோயில்களில் இருக்கும் பூசாரிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பல இந்து கோயில்களில வழங்கப்படும் சாம்பல் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிப்பதாகவும், இது மலேசியாவில் உள்ள பூட்டா குகை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்த வீடியோ தமிழ்நாடு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. 

image.png


இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் bioவை ஆய்வு செய்தி பார்த்தோம். அதில் சமூகவியல் பயணங்கள் என்றும், 48 நாடுகளுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் Nazanin Amiri என்ற அந்த பெண்மணி பல்வேறு நாடுகளுக்கு சென்றதற்கான புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே இந்த வீடியோ மலேசியாவில் கடந்த 2024-ல் எடுக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடிந்தது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போன்று தவறாகத் திரித்துப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க