YouTurn

மகாராஸ்டிரா நீதிமன்றத்தில் பெண் நீதிபதியும், வழக்கறிஞரும் சண்டையிடும் வீடியோவா ?

மகாராஸ்டிரா நீதிமன்றத்தில் பெண் நீதிபதியும், வழக்கறிஞரும் சண்டையிடும் வீடியோவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும்,பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிடுவதாகவும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த நிகழ்வு எனக் கூறியும் 1 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரின் சண்டை குறித்து தேடுகையில், " 2022 அக்டோபர் 29ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வைரல் செய்யப்படும் வீடியோ தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் சண்டையிடும் இரண்டு பேருமே வழக்கறிஞர் என்றேக் குறிப்பிடப்பட்டு உள்ளது.



செய்தியில், " உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸ்காஞ் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாறி மாறி அடித்துக் கொண்டு உள்ளனர். இது தொடர்பாக அலிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது காஸ்காஞ் பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்து உள்ளதாகக் " கூறப்பட்டு உள்ளது.



டைனிக் பாஸ்கர் எனும் இந்தி செய்தி தளத்தில், " குடும்ப நல வழக்கு தொடர்பாக காஸ்காஞ் மாவட்ட நீதிமன்றத்தில் வாதாட வந்த அலிகார் வழக்கறிஞர் சுனிதா கௌசிக் மற்றும் காஸ்காஞ் வழக்கறிஞர் கவிதா சக்சேனா இடையே உருவான வார்த்தை மோதலால் சண்டை ஏற்பட்டதாக " குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க : சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு – மோடியின் ராஜதந்திரம் எனப் பரப்பப்படும் பொய் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிடுவதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது நீதிபதி அல்ல, இரண்டு பேரும் வழக்கறிஞர்கள் தான். இந்த சம்பவம் நிகழ்ந்தது மகாராஷ்டிரா அல்ல, உத்தரப்பிரதேசம் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க