யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஹரிசந்திரேஷ்வரர் கோவிலின் புகைப்படத்தை, பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். பரவி வரும் புகைப்படத்திற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
பரவிய செய்தி
"காந்தார தேசம்" என்றழைக்கபடும் ஆப்கானிஸ்தானில் உள்ள "Asamai” என்ற மலைத்தொடரில் உள்ள சிவன் கோயிலின் இன்றைய நிலை.. இது இன்றும் உள்ளது. ஆனால் இங்கே வழி பாடு இல்லை. கோவில் அருகே உள்ள குளம் இன்றும் உள்ளது. முஸ்லீம் தேசம் ஆகி விட்டதால் அவர்கள் இதை கண்டு கொள்வதில்லை. ஆனால் சகுனி காந்தாரி இங்கே தான் பிறந்தனர். ஒரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் கௌரவர்கள் சகுனி காந்தாரி உட்பட அனைவரும் வழிபடப்பட்ட சிவ பெருமான் இவர். காந்தார நாட்டு தலை நகர் தான் தற்போது காந்தஹார் என்ற பெயரில் ஆஃப்கானில் உள்ளது! இதன் அருகே உள்ள முல்தான் என்ற ஊரில் தான் சகுனி பிறந்தார்.
விரிவான விளக்கம்
பஞ்ச பாண்டவர்கள், கௌரவர்கள், சகுனி, காந்தாரி உட்பட அனைவரும் வழிபட்ட சிவன்கோவில் ஆப்கானிஸ்தானில் உள்ளது என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அப்பதிவுகளில், "காந்தார தேசம் என்றழைக்கபடும் ஆப்கானிஸ்தானில் உள்ள மலைத்தொடரில் தான் இது உள்ளது. ஆனால் இங்கே வழிபாடு இல்லை. கோவில் அருகே உள்ள குளம் இன்றும் உள்ளது. இது முஸ்லீம் தேசம் ஆகிவிட்டதால் அவர்கள் இதை கண்டு கொள்வதில்லை. ஆனால் சகுனி காந்தாரி இங்கே தான் பிறந்தனர்“ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
"காந்தார தேசம்" என்றழைக்கபடும் ஆப்கானிஸ்தானில் உள்ள "Asamai" எனும் இந்து கோயிலின் இன்றைய நிலை... pic.twitter.com/VokN2dDdy3
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Secret_temples” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரவி வரும் இதே புகைப்படம் கடந்த 2021-ல் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், “மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஹரிசந்திரேஷ்வரர் கோவில்“ என்றும், இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் பெயர் “valmik_kolhe”என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் கடந்த 2021-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை தான் தற்போது சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து தேடியதில், மகாராஷ்டிராவில் உள்ள ஹரிசந்திரேஷ்வரர் கோவில் குறித்து, “DIYnamics“ என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. பரவி வரும் புகைப்படத்தை இந்த வீடியோவோடு ஒப்பீடு செய்து பார்த்ததில், இரண்டும் கச்சிதமாக பொருந்தின.
இதன் மூலம் பரவி வரும் புகைப்படம் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஹரிசந்திரேஷ்வரர் கோவிலின் புகைப்படத்தை, பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும், பரவி வரும் புகைப்படத்திற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் அறிய முடிந்தது.