யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழ் தேசிய தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் புதிய புகைப்படம் !

விரிவான விளக்கம்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினருடன் தற்போதும் எனக்கு தொடர்பு இருக்கிறது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பழ.நெடுமாறன் அவர்களால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான அறிக்கையால் அரசியல் பரபரப்பு உருவானது. இந்த விவகாரத்தில், மகனை பலி கொடுத்து விட்டு பிரபாகரன் தப்பித்து சென்று இருக்க மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய நிலைபாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், பிரபாகரன் அவர்களின் புதிய புகைப்படம் எனக் கூறி பிரபாகரன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Facebook link
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2023 பிப்ரவரி 13ம் தேதி வெங்கடேஷ் குமார் எனும் ட்விட்டர் பக்கத்தில் Prabhakaran JOY என்ற தலைப்புடன் வைரல் படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.
Twitter link | Archive link
அவருடைய ட்விட்டர் சுயவிவரத்தை பார்க்கையில், ” எழுத்தாளர் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர் ” எனப் பதிவிட்டு இருக்கிறார். இயக்குநர் வெங்கடேஷ் குமார் பதிவிட்ட வயதான தோற்றத்தில் இருக்கும் பிரபாகரனின் வண்ணப் படத்தை 2020ல் ட்விட்டர்வாசி ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
Twitter link | Archive link
2020-ல் ட்விட்டரில் பதிவிடப்பட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் செய்யப்படும் படத்தின் உண்மையான புகைப்படம் 2020 நவம்பர் Ganaeramesh எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருந்தது கிடைத்தது.
Twitter link | Archive link
பிரபாகனின் பழைய புகைப்படத்தை Face app போன்ற எடிட் செயலிகள் மூலம் வயதான தோற்றத்தில் இருப்பது போன்று எடிட் செய்து இருக்கிறார். ஒருவரை குழந்தையாக, வயதானவராக காண்பிக்க எடிட் செய்யும் பல செயலிகள் இங்குள்ளன.

மேலும் படிக்க : பிரபாகரனுக்கு ஜெ.அன்பழகன் உதவியதாக அமீர் அளித்த பேட்டியால் பரவும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புதிய படம் எனப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. இந்த புகைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக பரவி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது

மீண்டும் உயிருடன் #வேலுப்பிள்ளை #பிரபாகரன் #CAPTAIN_PRABAKAR1N pic.twitter.com/HLH6AD71x2
— Raw Agent🔥 (@NEWSER_POLITICS) February 12, 2020
Twitter link | Archive link
2020-ல் ட்விட்டரில் பதிவிடப்பட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் செய்யப்படும் படத்தின் உண்மையான புகைப்படம் 2020 நவம்பர் Ganaeramesh எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருந்தது கிடைத்தது.
Happy Birthday Thalaiva... ❤️❤️#HBDTamilsLeaderPrabhakaran pic.twitter.com/GCscVGYGFW
— Ganaeramesh (@Ganae_Ramesh) November 26, 2020