YouTurn

2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

நாட்டின் 17வது மக்களவையின் பதவிக்காலம் 16 ஜூன் 2024 அன்று முடிவடையவுள்ளது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான 18வது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தநிலையில், வருகின்ற ஏப்ரல் 19 அன்று மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று கூறி, தேர்தல் ஆணையத்தின் அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த அறிவிப்பில், "2024 பொதுத் தேர்தல் விவரங்கள்: 12.03.2024-தேர்தல் அறிவிப்பு; 28.03.2024- நியமனங்கள் (Nominations); 19.04.2024- வாக்கெடுப்பு நாள்; 22.05.2024- தேர்தல் முடிவுகள்; 30.05.2024- புதிய அரசு உருவாக்கம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து பரவும் செய்தி உண்மையானதல்ல என்பதை அறிய முடிந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இது குறித்து தேடிப் பார்த்தோம். அதில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளும், தெலங்கானா இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளுமே இடம்பெற்றிருந்தன. ஆனால் இதில் 2024 மக்களவை தேர்தல் குறித்து எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.



மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பிப்ரவரி 24 அன்றே இது குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "மக்களவை 2024 தேர்தலுக்கான அட்டவணை குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் இதுவரை தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அட்டவணையை செய்தியாளர் சந்திப்பு மூலம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதியானது இந்தியா கூட்டணி எனப் பரவும் தவறான பட்டியல்!

இதற்கு முன்பும் தேர்தல்கள் குறித்து பல செய்திகள் போலியாகப் பரவின. அப்போதும் இது குறித்து ஆய்வு செய்து பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: 2024 தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கூறியதாகப் பரவும் எடிட் செய்த படம் !

முடிவு:

நம் தேடலில் 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெறப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எனப் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

Election commission of India announcement -
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க