YouTurn

அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் கூறுவதாகப் பரப்பப்படும் பழைய செய்தி.

அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் கூறுவதாகப் பரப்பப்படும் பழைய செய்தி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

டிசம்பர் 19, 2020 அன்று எல்.முருகன் கூறிய கருத்தை, அண்மையில் கூறியதாகத் திரித்துப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

கடைசியா... அதிமுக வேட்பாளர்களயே பாஜக தான் முடிவு செய்யும் ன்னு சொன்னாலும் சொல்லுவானுக போல...

யோவ் பாதம் தாங்கி பழனிச்சாமி.... என்னயா இதெல்லாம் 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும். இந்த கூட்டணி, தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழக அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் செயல்படும்“ என்று தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என எல்.முருகன் பேசியதாக வைரல் நியூஸ்கார்ட் பரவி வருகிறது.  


உண்மை என்ன ? 

பரவி வரும் நியூஸ் கார்டில், முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்டில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதேபோல் டிசம்பர் 19, 2020 என்ற தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக தலைவராக எல்.முருகன் பதிவிக்காலம் முடிந்து, அண்ணாமலை பதிவிக்காலம் முடிந்து, தற்போது நயினார் நாகேந்திரன் தலைவர் பதிவில் உள்ளார். இதன்படி பார்க்கையில் பார்க்கையில் இந்த நியூஸ் கார்ட் அண்மையில் வெளியானது இல்லை என்பது தெரிந்தது. 


இந்த நியூஸ்கார்ட் உண்மையா என்பது குறித்து அறிய, பாலிமர் செய்தி ஊடகத்தின் சமூகவலைதள பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்போது டிசம்பர் 19, 2020 அன்று, இந்த நியூஸ் கார்ட்டை பாலிமர் நிறுவனம் வெளியிட்டுயிருந்ததை காணமுடிந்தது. 

மேலும் இந்த செய்தி குறித்து தேடுகையில், ”அதிமுக, பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பா.ஜ.கதான் முடிவு செய்யும் - எல்.முருகன்” என்ற தலைப்பில்  NEWS 18 TAMILNADU ஊடகம், கடந்த ஏப்ரல் 22, 2021-ல் செய்தி வெளியிட்டுயிருந்ததை காணமுடிந்தது.

image.png

அதே போல் குமுதம் செய்தி நிறுவனமும் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்த நியூஸ்கார்ட்டை வெளியிட்டுயிருந்தது. அதே போல் தந்தி தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் இந்த செய்தியை காணமுடிந்தது. 


முடிவு : 

அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுவதாகப் பரப்பப்படுவது பழைய செய்தியாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.