யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 'சிங்கம் சிலை' பிரிசாக வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை போலியாக Edit செய்து ’பன்றி சிலை’ பரிசாக வழங்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
மு க ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி நீதானய்யா ஆளுகின்றீர்கள்
தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலையை வழங்கி இருக்கின்றனர்

விரிவான விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்கியதாகவும், தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலை வழங்கியதாகவும் சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
மு க ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி நீதானய்யா ஆளுகின்றீர்கள்
தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலையை வழங்கி இருக்கின்றனர் pic.twitter.com/0amFQhxKA5
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து சன் நியூஸின் சமூகவலைதளங்களில் பக்கங்களில் தேடி பார்த்தோம். அப்போது 21 ஜூன், 2025 அன்று சன் நியூஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிங்கம் சிலை' பரிசாக வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை தான் எடிட் செய்து, ’பன்றி சிலை’ பரிசாக வழங்கப்பட்டதாக தவறாக பரப்புகின்றனர்.

இது குறித்து News18 Tamil Nadu ஊடகமும் மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘சிங்கம் சிலை' பரிசாக வழங்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டுயிருந்ததை பார்க்கமுடிந்தது.
மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘சிங்கம் சிலை' பரிசாக வழங்கப்பட்டது#CMStalin #ValluvarKottam #Chennai #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/HSIq6Kj3cE
அதே போல் செய்தி சோலை ஊடகப்பக்கத்தில், முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயனளிக்க கூடிய வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு சிங்கம் சிலை பரிசாக வழங்கப்பட்டது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

முடிவு :
முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பரிசாக வழங்கப்பட்ட சிங்கம் சிலையை, எடிட் செய்து பன்றி சிலை பரிசாக வழங்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.