YouTurn

அமெரிக்க தேவாலயத்தில் ஆணும் ஆணும் திருமணம் செய்த போது மின்னல் தாக்கியதாகப் பரவும் பொய் !

அமெரிக்க தேவாலயத்தில் ஆணும் ஆணும் திருமணம் செய்த போது மின்னல் தாக்கியதாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடக்கும் போது மின்னல் தாக்கி ஆலயம் தீக்கிறையானது..


விரிவான விளக்கம்

மெரிக்காவில் உள்ள ஒரு பிரபல தேவாலயத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களான ஒரு ஆணும் மற்றொரு ஆணும் திருமணம் செய்து கொண்டபோது மின்னல் தாக்கி அந்த தேவாலயம் தீக்கிறையானது என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.








மேலும் இந்த வீடியோ இதே தகவலுடன் உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது.


உண்மை என்ன ?

.

பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், Boston 25 செய்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் 03 அன்று இந்த வீடியோவை பதிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

.



அதில், "ஸ்பென்சரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான தேவாலயத்தின் கோபுரம் வெள்ளிக்கிழமை அன்று இடிந்து விழும் தருணத்தை இந்த வீடியோ படம்பிடித்துள்ளது. படஉதவி: ஜானதன் கெல்லி (Jonathan Kelley)" என்று குறிப்பிட்டுள்ளது. 









இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் ஊடகம், கடந்த ஜூன் 03 அன்று "வரலாற்றுச் சிறப்புமிக்க மாசசூசெட்ஸ் தேவாலயம் தீயில் எரிந்து நாசமானது" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாசசூசெட்ஸ் தேவாலயம் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.  தீ விபத்து ஏற்பட்ட போது தேவாலயம் காலியாக இருந்ததால் தீ விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளது.



இதே போன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கடந்த ஜூன் 04 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், "தீ மளமளவென தேவாலயத்தில் இருந்து அதன் தரை தளம் வரை பரவியது. இறுதியில் செங்குத்தான தளம் முற்றிலும் எரிந்து கீழே விழுந்தது. தேவாலயத்தின் இடைக்கால போதகரான ரெவ. புரூஸ் மேக்லியோட், இந்த தேவாலயம் மரம் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி 1800களில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

.

மேலும், தேவாலயம் தீயில் எரிந்த போது காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இதன் மூலம் போஸ்டனில் உள்ள பழமையான தேவாலயம் கடந்த ஜூன் 02 அன்று மின்னல் தாக்கி தீக்கிறையாகியுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

.

முடிவு :

.

நம் தேடலில், ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்ட போது மின்னல் தாக்கி அமெரிக்க தேவாலயம் ஒன்று தீக்கிறையாகியுள்ளது எனப் பரவும் தகவல்கள் தவறானவை. இச்சம்பவம் நிகழ்ந்த போது தேவாலயத்தில் திருமணம் ஏதும் நடக்கவில்லை, தேவாலயம் காலியாகவே இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க