யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனரா?
பரவிய செய்தி
பெண்களை தரையில் அமர வைத்திருக்கும் TVK. ஒய்யாரமாக சேர் போட்டு உக்காந்து இருக்கும் ஆண்கள். Super Bro விஜய்.

விரிவான விளக்கம்
இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக, தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில், “ஆண்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு, பெண்கள் அனைவரையும் தரையில் அமர வைத்து, பெண்கள் அவமதிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தவெக போராட்டத்தில் பெண்களை கீழே அமரவைத்து இழிவுபடுத்தி உள்ளனர்!! கொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லாத செயல்.. அரசியல் அசிங்கம் அல்ல. விஜய் மனிதனாக இருப்பதற்கு அசிங்கப்பட வேண்டும்!! @TVKVijayHQ pic.twitter.com/WIFYMOr0NO
உண்மை என்ன?
தவெக போராட்டத்தில் பெண்கள் அவமதிக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அப்படத்தில் பெண்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருப்பதையும், ஆண்கள் சிலர் தரையில் அமர்ந்திருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது.
Raj Mohan முதற்கொண்டு கீழ தான்டா உக்காந்திருக்காங்க தற்குறி
போராட்டத்துக்கு சொகுசா சேர் போட்டு இல்ல அவர மாதிரி காலுக்கு ஒண்ணு தலைக்கு ஒன்னு வச்சிட்டு பண்றதுக்கு பேரு போராட்டம் இல்லை .
பேருக்கு 50 Chair போட்டு .. தொண்டர்கள் ஆதரவாளர்கள் எல்லாரும் நின்னுட்டோ இல்ல உட்கார்ந்துட்டோ… https://t.co/0uwDDvXhhh pic.twitter.com/xcjON1rPtP
மேலும் இது குறித்து, தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்களில் “தவெகவினரின் உண்ணாவிரத போராட்டம்” என்று குறிப்பிட்டு செய்தியும் வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த ஊடகங்கள் வெளியிட்டிருந்த வீடியோக்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் இருக்கைகளிலும் தரையிலும் அமர்ந்திருப்பதை காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில், “ஆண்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு, பெண்கள் அனைவரையும் தரையில் அமர வைத்து, பெண்கள் அவமதிக்கப்பட்டனர்” என்று பரவும் செய்தி தவறானது என்பது தெளிவாகிறது.