YouTurn

மல்யுத்த வீராங்கனைகள் பற்றி குஷ்பு பேசியதாகப் பரவும் தினமலரின் போலி நியூஸ் கார்டு‌.. அதையே பகிர்ந்து விமர்சித்த குஷ்பு !

மல்யுத்த வீராங்கனைகள் பற்றி குஷ்பு பேசியதாகப் பரவும் தினமலரின் போலி நியூஸ் கார்டு‌.. அதையே பகிர்ந்து விமர்சித்த குஷ்பு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது போல் ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

பிரபல இந்திய மல்யுத்த வீரர்கள் WFI (Wrestling Federation of India) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியும், அவரை கைது செய்யக் கோரி கடந்த ஏப்ரல் 23-ல் இருந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது போல் ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கூறியதாகக் கூறி தினமலரின் நியூஸ் கார்டு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் இந்த நியூஸ் கார்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, அப்பதிவில் "பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். இதை நான் கூறவே இல்ல. தினமலர் போலிச் செய்திகளைப் பரப்புவதில் இவ்வளவு கீழ் நிலையில் செயல்படுவதைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளது." என்று கூறியுள்ளார். 



Archive Link:

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து தினமலரின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த ஆதாரங்கள் குறித்து குஷ்பு கூறியது குறித்து எந்த நியூஸ் கார்டும் தினமலர் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் "திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? - காங்கிரசுக்கு குஷ்பு சவால்" என்னும் தலைப்பில் நேற்று (ஜூன் 19) தினமலர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது.



எனவே "திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா?" என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.



இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினமலர், "தினமலர் பெயரில் குஷ்பு சொன்னதாக சமூகவலைத்தளங்களில் பரவும் போலி பதிவு" என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ் கார்டுக்கு மறுப்பு தெரிவித்து பதிவுசெய்துள்ளனர்.

மேலும் படிக்க: வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை எனப் பரவும் போலிச் செய்தி !

மேலும் படிக்க: நடிகர் விஜய் வாரிசு பட வெற்றியை பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !

முடிவு:

நம் தேடலில், ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தினமலரின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க