YouTurn

பிரச்சார மேடையில் அதிமுகவை புகழ்ந்து பேசினாரா ராகுல்காந்தி? கிஷோர் கே சாமி பரப்பும் பொய்!

பிரச்சார மேடையில் அதிமுகவை புகழ்ந்து பேசினாரா ராகுல்காந்தி? கிஷோர் கே சாமி பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதிமுகவை பாஜக கையகப்படுத்தியிருக்கிறது, பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக அதிமுகவை பயன்படுத்துகிறது என்று அதிமுகவை விமர்சனம் செய்துதான் பேசியிருக்கிறார்.

பரவிய செய்தி

ராகுல் காந்தி ஒரு முடிவோட தான் இருக்கார் 


X Link


விரிவான விளக்கம்

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில், கன்னியாகுமரி பிரச்சாரக் கூட்டத்தில், ‘அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்நாட்டை உண்மையிலே பிரதிநிதித்துவப்படுத்திய அதிமுக தலைவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள்’ என்று ராகுல்காந்தி பேசும் சிறிய வீடியோவை பதிவிட்டு, ராகுல்காந்தி அதிமுகவிற்காக ஆதரவாக பிரச்சார மேடையில் பேசியதாக கிஷோர் கே சாமி சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார். 



உண்மை என்ன? 


ராகுல்காந்தி கன்னியாகுமரியில் பேசிய முழு உரையயும் ’மின்னம்பலம்’ தளத்தில் காணமுடிந்தது. 



அதில் “எங்கேயெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கேயெல்லாம் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு, அதன்பின்னர் டெல்லியில் இருந்து அந்தப் பகுதியை ஆள நினைக்கிறது பாஜக. ஆனால் இதை தமிழ் மக்களிடம் நேரடியாக சொல்வதற்கு அவர்களுக்கு தைரியமில்லை. அதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் பெரிய வரலாற்றை உடைய ஒரு இயக்கத்தை (அதிமுக) இப்போது கைவசப்படுத்தி இருக்கிறார்கள். அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்நாட்டை உண்மையிலே பிரதிநிதித்துவப்படுத்திய அதிமுக தலைவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு வெற்றுக் கூடாக மாறியிருக்கிறது. தற்போது அதிமுக பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக மாறிப்போய் இருக்கிறது. அதிமுகவின் இன்றைய தலைவர்கள் ஊழலில் திளைத்த காரணத்தால் இன்று மோடி அரசிடம் முழுமையாக சரணாகதி அடைந்திருக்கிறார்கள்” என்றுதான் பேசியிருகிறார். 


அதாவது, அதிமுகவை பாஜக கையகப்படுத்தியிருக்கிறது, பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக அதிமுகவை பயன்படுத்துகிறது என்று அதிமுகவை விமர்சனம் செய்துதான் பேசியிருக்கிறார். 


முடிவு:


ராகுல்காந்தி உரையிலிருந்து சிறு பகுதியை மட்டும் பதிவிட்டு, அதனைத் திரித்து ராகுல்காந்தி பிரச்சார மேடையில் அதிமுகவை புகழ்ந்து பேசியதாக கிஷோர் கே சாமி தவறாக பரப்புகிறார். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க