YouTurn

அடிமாலி நிலச்சரிவை வயநாடு பேரிடரோடு தொடர்புபடுத்தி பரவும் தவறான வீடியோ!

அடிமாலி நிலச்சரிவை வயநாடு பேரிடரோடு தொடர்புபடுத்தி பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை வயநாட்டில் நடந்ததாக பரவும் தவறாக பரப்பபடுகிறது.

பரவிய செய்தி

Incredible..


#WayanadLandslide 


#WayanadDisaster 

#Kerala



X link

விரிவான விளக்கம்

கேரளம் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழைபெய்து வருகின்றது அதன் விளைவகாவே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக நடைப்பெற்று வருகிறது. பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ள நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கியுள்ளார் நம்பமுடியாதது எனக் குறிப்பிட்டு 0:21 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



உண்மை என்ன ? 


பரவி வரும் வீடியோவில், Kairali ( கைரலி ) என்ற லோகோ இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும், அதே வீடியோவில் ஜூன் 11 என்று இருப்பதை கவனிக்க முடிகிறது. 


வீடியோவில் இருக்கும் KAIRALI என்ற வார்த்தையைக்கொண்டு தேடியதில் Kairali News என்ற யூடியூப் பக்கத்தில் அடிமாலிகுதியில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்கப்பட்டார் எனக் குறிப்பிட்டு ஜூன் 11ஆம் தேதி 2024 பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.






மேலும் , இந்த தகவல் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்ததில், மலையாளம் india today இணையதளப்பக்கத்தில் ‘’அடிமாலி நிலச்சரிவு விபத்து: தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது நிலச்சரிவு; இரண்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்’’ என்றத் தலைப்பில் ஜூன் 11, 2024 அன்று செய்தி ஒன்று வெளியாகி இருப்பதைப் பார்க்க முடிந்தது.


மேலும் இதுதொடர்பாக தேடியதில் பரவக்கூடிய இதே வீடியோ Mohammad Gouse M S யூடியூப் பக்கத்தில் கடந்த மாதம் ஜூலை 18ஆம் தேதி பதிவாகியிருப்பதை பார்க்க முடிந்தது.


இதிலிருந்து பரவி வரும் வீடியோ வயநாட்டில் தற்போது ஏற்பட்ட நிலச்சரிவோடு தொடர்புடையது அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

வயநாடு நிலச்சரிவுடன் தொடர்புப்படுத்திப் பல பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. அதன் உண்மைத் தன்மைகள் பற்றி யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : வயநாடு நிலச்சரிவு சிசிடிவி காட்சி எனப் பரவும் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ! 

முடிவு:


நம் தேடலில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரி  எனப் பரவும் வீடியோ தகவல் உண்மையானது அல்ல. மேலும் இந்த சம்பவம் அடிமாலிகுதியில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க