YouTurn

கேரளாவில் பெண்களிடம் அத்துமீறிய முஸ்லீம் நபரை இந்து பெண்கள் தாக்கியதாக பரப்பப்படும் வதந்தி !

கேரளாவில் பெண்களிடம் அத்துமீறிய முஸ்லீம் நபரை இந்து பெண்கள் தாக்கியதாக பரப்பப்படும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கேரளாவில் இஸ்லாமியர் ஒருவரின் தவறான நடத்தைக்காக இந்து பெண்கள் அவரை தாக்கியுள்ளனர்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

கேரளாவில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இஸ்லாமியர் ஒருவரை அங்குள்ள இந்து பெண்கள் தாக்கியதாக 1.45 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும், லவ் ஜிகாத் குறித்த வாசகங்களுடனும் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் கேரளா வீடியோ குறித்து தேடுகையில், " கேரளாவில் பாதிரியாரின் படத்தை மார்பிங் செய்ததாக கூறி ஒரு குடும்பதையே தாக்கிய 11 பெண்கள் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளதாக " ஜனவரி 7ம் தேதி இந்தியா டுடேவில் வெளியான செய்தியில், வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற காட்சி புகைப்படமாக பதிவாகி இருக்கிறது.



செய்தியின்படி, " இந்த தாக்குதல் சம்பவம் கேரளாவின் திருச்சூரில் உள்ள எம்பேரர் இமானுவேல் ரீட்ரீட் சென்டர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. தேவாலயத்தின் பாதிரியார் படத்தை மார்பிங் செய்து பரப்பியதாகக் கூறி சாஜி, அவரது மனைவி அஸ்லின், மகன் சாஜன் மற்றும் உறவினர்களை தேவாலயத்தில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் தாக்கி உள்ளனர். அந்த நபரின் மீது தேவாலயம் சார்பில் புகாரும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர் " என இடம்பெற்று இருக்கிறது.



கேரளா செய்தி இணையதளமான onmanorama-வில், " தேவாலயத்தை விட்டு பிரிந்த சென்ற சாஜி பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டதாகக் கூறி பெண்கள் கும்பலாக தாக்கி உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு உள்ளது " என இடம்பெற்று இருக்கிறது.



தேவாலயத்தில் இருந்து பிரிந்து சென்ற சாஜி என்ற நபர் பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட படத்தை பரப்பியதாகவே குற்றச்சாட்டப்பட்டு தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. இதில், தாக்கியவர்களும், தாக்கப்பட்ட நபரும் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்து-முஸ்லீம் அல்ல.



Twitter link | attack link 

இதேபோல், " கேரளா... பெண்களை மார்பிங் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கி விட்டனர் " எனக் கூறி இதே வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளான நபர் கட்சி சார்ந்தவர் என எங்கும் குறிப்பிடவில்லை, இது தேவாலயம் சார்ந்தவர்களுக்கு இடையே நிகழ்ந்த தாக்குதல்.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவில் இஸ்லாமியர் ஒருவரின் தவறான நடத்தைக்காக இந்து பெண்கள் அவரை தாக்கியுள்ளதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. பெண்களின் படத்தை மார்பிங் செய்ததாகக் கூறி சாஜி என்பவரை தேவாலயத்தை சேர்ந்த பெண்கள் கும்பலாக தாக்கி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான சாஜி தேவாலயத்தில் இருந்து பிரிந்து சென்றவர்.

இதேபோல், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாஜக கிளைச் செயலாளர் எனப் பரப்பப்படும் தகவலும் தவறானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க