YouTurn

கேரளாவில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு இந்துக்களிடம் பணம் பறிப்பு எனப் பரவும் போலி வீடியோ !

கேரளாவில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு இந்துக்களிடம் பணம் பறிப்பு எனப் பரவும் போலி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கேரள மாநிலத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அங்கு வரும் அனைத்து இந்து வாகன ஓட்டிகளிடமும் கட்டாய பணம் வசூல் செய்யும் கிறிஸ்துவர்கள்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

கடந்த டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அங்கு வரும் அனைத்து இந்து மதத்தைச் சேர்ந்த வாகன ஓட்டிகளிடமும் கட்டாய பணம் வசூலை கிறிஸ்துவர்கள் செய்துள்ளனர் என்று கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், இளைஞர்கள் கூட்டம் ஒன்று காரில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு தகராறு பண்ணுவது போன்றும், பின்னர் அந்த காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ள ஒரு நபரை, சாலையில் இழுத்து, கூட்டமாக தாக்குவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.





மேலும் இந்த வீடியோ யூடியூப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த டிசம்பர் 26 அன்று சுஜித் ராமச்சந்திரன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதில், "தாயகத்திற்கு நிதி திரட்டுகிறோம்! கேரளாவின் குளத்துப்புழா என்ற பகுதியில் அமைந்துள்ள கமிளியான் (Chameleon) என்ற இடத்தில் குடும்பத்துடன் பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள், திரையில் : ஜிஷ்ணு மழவில்லு, சுர்ஜித், பைஜு, சித்திக், நௌஷாத், மகேஷ், விஜயன் கடக்கல், ஜோதிஷ் & பிச்சு, திரைக்குப் பின்னால் : சுஜித் ராமச்சந்திரன்,  பொறுப்புத்துறப்பு : விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட வீடியோ" என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இவர் தான் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தவர் என்பதை உறுதி செய்ய முடிந்தது. 



மேலும் இதே போன்ற மற்றொரு வீடியோவிலும், பரவி வரும் வீடியோவில் நடித்துள்ளவர்கள் அனைவரும், இது உண்மையாக நடந்தது அல்ல. சித்தரிக்கப்பட்ட வீடியோவே என்று குறிப்பிட்டு, மீண்டும் அதே இடத்தில் ஒரு வீடியோவை எடுத்து நேற்று (டிசம்பர் 29) வெளியிட்டிருந்தனர்.



வீடியோவில் நடித்துள்ள இளைஞர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை, அதே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தின் மூலம் அறிய முடிந்தது.



மேலும் படிக்க: முஸ்லீம் வியாபாரி ஜூசில் எச்சில் துப்பிக் கொடுப்பதாகத் தவறாகப் பரவும் சித்தரிப்பு வீடியோ !

இதற்கு முன்பும் பல சித்தரிப்பு வீடியோக்கள், வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்பட்டன. அது குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என வலதுசாரிகள் தவறாகப் பரப்பும் சித்தரிப்பு வீடியோ !

முடிவு:

நம் தேடலில், கிறிஸ்துமஸ் முன்னிட்டு கேரளாவிற்கு வரும் இந்துக்களை தாக்கி கட்டாயப் பண வசூலிப்பு நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், இது விழிப்புணர்வுக்காகவே, போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க