யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வெளியிட்ட போஸ்டரை, எடிட் செய்து பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
நம்ம கரூர் எம்பிக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் சிலுவையில் அறையப்பட்ட ஜீசஸ் தெரியும். நம்மூர் ஸ்ரீராமர் யார் என தெரியாது.

விரிவான விளக்கம்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் 5-ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தமிழக தேவாலயங்களில் பிரார்த்தனை, ஆராதனை போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. நேற்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, புனித வெள்ளிக்கு வாழ்த்துக் கூறியதாக, அவரது புகைப்படம் கொண்ட போஸ்டர் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
நம்ம கரூர் எம்பிக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் சிலுவையில் அறையப்பட்ட ஜீசஸ் தெரியும்.
நம்மூர் ஸ்ரீராமர் யார் என தெரியாது.
🤣😄😂 pic.twitter.com/lH3jRFsHcb
உண்மை என்ன ?
பரவி வரும் போஸ்டர் கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடிப் பார்த்தோம். அப்படியான எந்த போஸ்டரும் எதிலும் இடம்பெறவில்லை. பின்னர் எம்.பி ஜோதிமணியின் முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் தேடிப் பார்த்தோம். புனித வெள்ளி குறித்து எந்த வாழ்த்து செய்தியையும் அவர் குறிப்பிடவில்லை.

கடைசியாகச் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை, புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் மட்டுமே பதிவிட்டு இருந்தார்.
மகத்தான சுதந்திரப் போராட்ட தியாகி. ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்.தனது இறுதிமூச்சுவரை இந்திய திருநாட்டின் விடுதலைக்காக சமரசமற்றுப் போராடிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்ததினத்தில் அவரது மாவீரத்தையும்,தியாகத்தையும் நினைவுகூர்வோம்.#deeranchinamalai #karurmpjothimani pic.twitter.com/3xJDht9rA7
இது குறித்து தீவிரமாகத் தேடிப் பார்க்கையில், ஏப்ரல் 17ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரில் வலது புறமாக ஜோதி மணியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். அந்த போஸ்டரை எடிட் செய்து, அவரின் புகைப்படத்தை இடது புறமாக வைத்து புனித வெள்ளிக்கு வாழ்த்துக் கூறுவது போல் போஸ்டரை பரப்பி வருகின்றனர்.

முடிவு :
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, புனித வெள்ளிக்கு வாழ்த்துக் கூறியதாகப் பரப்பப்படும் போஸ்டர் போலியானது.