YouTurn

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் புகைப்படம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் புகைப்படம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புத்தகம் மெர்சி பப்ளிகேஷன்ஸ் என்ற தனியார் நூல் வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தால் வெளியிடப்பட்டது அல்ல. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

தெலுங்கு வந்தேறி மகன் கருணாநிதி தமிழ் புத்தகத்தில் எப்படி இடம் பெற்றான்.?

ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு…

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக கூறி செய்தி ஒன்று பரவி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புத்தகத்தின் pdf கிடைக்குமா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது Padasalai. Info என்ற இணையதளப்பக்கத்தில் அந்த புத்தகத்தின் pdf இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் மெர்சி பப்ளிகேஷன்ஸ் கல்விநூல் வெளியீட்டாளர் என்றும், 43,பந்தர் தெரு, சென்னை - 600001 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இதையடுத்து மெர்சி பப்ளிகேஷன்ஸ் குறித்து தேடினோம். Kalvisolai என்ற இணையதளப்பக்கத்தில், இது 10th Tamil Guide என்றும், கவிமணி இன்பத்தமிழ் திருத்தியமைக்கப்பட்ட பாடநூல் அடிப்படையில் உருவாக்கப்பெற்ற புதிய பதிப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இது பாடப்புத்தகம் அல்ல, தமிழ் பாடத்தின் வழிக்காட்டி என்பது தெரியவந்தது. 

image.png


மேலும் இந்த இந்த புத்தகம் மெர்சி பப்ளிகேஷன்ஸ் என்ற தனியார் நூல் வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தால் வெளியிடப்பட்டது அல்ல என்பது உறுதியானது. 


முடிவு: 

நம் தேடலில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதாக தவறான தகவல்ரப்பப்படுவது தெரியவந்தது. இது மெர்சி பப்ளிகேஷன்ஸ் என்ற தனியார் நூல் வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க