YouTurn

அமித்ஷாவின் காலில் விழுந்த கனிமொழி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

அமித்ஷாவின் காலில் விழுந்த கனிமொழி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவது மட்டும் தான் தவறு. மற்றபடி...

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்களவை உறுப்பினரான கனிமொழி, ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் காலில் விழுவது போன்றும், அருகில் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் நிற்பது போன்றும் உள்ள புகைப்படம் பாஜக ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.



Archive Link



Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் உண்மையான புகைப்படத்துடன் தி ஹிந்து கடந்த 2015 ஜனவரி 06 அன்று "கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் கனிமொழி, ஸ்டாலினின் காலில் விழுவது போன்றும், அவர்கள் அருகே கலைஞர் கருணாநிதியும், ராஜாத்தி அம்மாளும் இருப்பது போன்றும் உள்ளது.

அதில், "மு.க.ஸ்டாலின் இன்று காலை கனிமொழியின் இல்லத்துக்குச் சென்றபோது, தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி பெற்றார். அவர் தனது பிறந்தநாளை தனது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமான கட்சித் தலைவர்களுடன் கொண்டாடினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த 2015-இல் தினமலர் வெளியிட்டுள்ள கட்டுரையிலும் இந்தப் புகைப்படத்தைக் காணமுடிந்தது.

அடுத்ததாக, அமித்ஷாவின் புகைப்படம் குறித்து தேடுகையில், 2019ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



இதன் மூலம், கனிமொழி தன்னுடைய பிறந்தநாளுக்கு ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற புகைப்படத்தை, அமித்ஷாவின் காலில் விழுவது போன்று எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.



மேலும் படிக்க: போப் பிரான்சிஸ் உலகை ஆளும் இலுமினாட்டிகளின் காலில் விழுவதாகப் பரப்பப்படும் வதந்தி !

மேலும் படிக்க: இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்ததாகப் பரவும் வீடியோ| உண்மை என்ன ?

முடிவு:

நம் தேடலில், அமித்ஷாவின் காலில் விழுந்த எம்.பி கனிமொழி எனப் பரவும் புகைப்படம் போலியானது என்பதையும், 2015ல் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தில், அவர் மு.க.ஸ்டாலினிடம் காலில் விழுந்து ஆசி வாங்குவதையும் காண முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க