யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் இந்துக் கோயில்களுக்கு எதிராக செய்த குற்றங்களுக்கு விளைவுகளை சந்திக்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. 
X post link | Archive link

X post link | Archive link
விரிவான விளக்கம்
காஞ்சிபுரத்தில் நிமந்தகார தெருவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் தொன்மையான ஸ்ரீ நல்ல கம்ப விநாயகர் கோயிலை இடித்து உள்ளதாகவும், இதை ஆளும் அரசே செய்துள்ளதாகக் கூறியும் 50 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கோயில் கோபுரத்தை இடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உண்மை என்ன ?
காஞ்சிபுரத்தில் இடிக்கப்பட்ட ஸ்ரீ நல்ல கம்ப விநாயகர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் வருகிறதா என அறிய அத்துறையின் இணையதளத்தில் தேடுகையில், அக்கோயிலின் பெயர் இடம்பெறவில்லை.

கூகுள் மேப் மூலம் காஞ்சிபுரம் நிமந்தகார தெருவில் உள்ள ஸ்ரீ நல்ல கம்ப விநாயகர் கோயிலின் பழைய புகைப்படம் கிடைத்தது. கோயிலுக்கு அருகில் உள்ள கடை ஒன்றை தொடர்பு கொண்டு பேசுகையில், " கோயில் இடிக்கப்பட்டது உண்மை. ஆனால், அது அரசு நிர்வகிக்கும் கோயில் அல்ல. ஒரு குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் கோயில் தான். கோயிலை புதிதாக கட்டவே இடித்து இருந்தனர். தற்போது அக்கோவிலை செந்தில்குமார் மற்றும் அவரது மகன் ரஞ்சித் குமார் ஆகியோரே பார்த்துக் கொள்கிறார்கள் " எனத் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக, கோயிலை நிர்வகித்து வரும் ரஞ்சித் குமார் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், இந்த கோயில் 1882ல் தாத்தா விஜயராகவா முதலியார் தான் கட்டினார். 5 தலைமுறையாக நாங்கள் தான் கோயிலை பராமரித்து வருகிறோம். கோயில் கட்டிய பிறகு கும்பாபிஷேகம் செய்யாமல் இருந்ததால் சில வருடத்திற்கு முன்பு உள்ளே சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கும்பாபிஷேகம் செய்யலாம் என முடிவு எடுத்து கடந்த டிசம்பர் 8ம் தேதி பாலாலயம் நிகழ்ச்சியை நடத்தினோம்.
அதன் பிறகு ஜனவரி 2ம் தேதி கோயிலை இடிக்கும் பணிகள் நடைபெற்றது. அதே இடத்தில் அடுத்த மாதம் 26ம் தேதி கோயிலை கட்ட பூமி பூஜை செய்ய முடிவெடுத்து உள்ளோம். வேறு எந்த கட்டுமானமும் அங்கு வரப் போவதில்லை. கோயில் பட்டா நகல் கோயில் பெயரில் வருகிறது. கோயில் மின்சார கட்டணம் தாத்தா பெயரில் வரும், வரி மற்றும் தண்ணீர் கட்டணம் உள்ளிட்டவை கோயில் தர்மகர்த்தா என என்னுடைய அப்பா பெயரில் வருகிறது. வரி எல்லாம் முறையாக கட்டி வருகிறோம்.

அடுத்த 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறோம். ஆனால், தொடக்கத்திலேயே தவறான செய்திகளை பரப்பி விட்டனர். இங்கு அருகே இடத்தை ஆக்கிரமித்த சிலர் புகார் எல்லாம் கொடுத்து பிரச்சனை செய்தார்கள். ஆனால், ஆர்.ஐ, வி.ஏ.ஓ, தாசில்தார் எல்லாம் இங்கு வந்து எங்களிடம் விசாரித்து விட்டே சென்றனர். கோயில் இடியும் நிலையில் இருப்பதால் நாங்களே இடித்து விட்டு கோயிலை கட்டும் பணிகளை தொடங்கி விட்டோம் " எனக் கூறி இருந்தார்.
கடந்த டிசம்பர் 8ம் தேதி ஸ்ரீ நல்ல கம்ப விநாயகர் கோயிலுக்கு பாலாலயம் விழா நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ Sankara- Times of kanchi எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், காஞ்சிபுரத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ நல்ல கம்ப விநாயகர் கோயிலை தமிழ்நாடு அரசு இடித்ததாகப் பரப்பப்படும் தகவல் வதந்தியே. அக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல. அக்கோயில் தனியாரால் நிர்வகிக்கப்படும் கோயில். அக்கோயிலை புதுப்பித்து கட்டவே இடித்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
திராவிட குலநாசம் சர்வநிச்சயம்....!! pic.twitter.com/Inst8LJXTD
— Sreedhar_HM (@SShivajisreeram) January 17, 2024
I can't wait for the @mkstalin @Udhaystalin family to face the consequences (karma to hit back) of their crimes against our Hindu temples.
Shame on all those Hindus who voted for them. pic.twitter.com/HW1WKJOOMG
— Tathvam-asi (@ssaratht) January 18, 2024