யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜீனியர் விகடன் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று நமக்கு உறுதிபடுத்தியுள்ளனர். “ஐ.நா-வுக்கு சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?” என்று வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை, இவ்வாறு எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
வழக்கமா இதெல்லாம் சீமான்டிதான சொல்லுவான். இப்போ என்ன புதுசா நீங்க ?..@vennilaVT

விரிவான விளக்கம்
சிவகங்கைக்கு காமராஜர் காரில் போய்க் கொண்டிருந்தபோது, டவுசரோடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையனை பார்த்துதான் மதிய உணவுத் திட்டமே ஆரம்பித்தார். அந்தப் பையன் வேறு யாருமல்ல, அண்ணன் சீமான்தான். 'காமராஜர்' படத்திலேயே இந்த காட்சி வந்திருக்கிறது என்று நா.த.க வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக ஜூனியர் விகடன் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
Wow 😂😂 pic.twitter.com/QYCD0uJSjm
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் இந்த செய்தி குறித்து ஜூனியர் விகடன் சமூக ஊடகப்பக்கங்களில் தேடி பார்த்தோம். அப்போது ஜூலை 15 அன்று ஜூனியர் விகடன் பேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்ட் ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் “ஐ.நா-வுக்கு சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?” என்று வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்ட்டை தான் எடிட் செய்து, சீமான் சிறுவயதில் காமராஜரோடு இருந்ததாக கூறுவது போல் தவறாக பரப்புகின்றனர்.

வெண்ணிலா தாயுமானவன் நேர்காணல் அளித்ததை விகடன் தனது இணையதளப்பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அதில் "ஐ.நா சபை எதிர்வரும் 2026-ம் ஆண்டை உலக மேய்ச்சல் நிலங்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மலைப்பகுதிகளின் ஆண்டாக அறிவித்துள்ளது. இப்போது ஐ.நா-வுக்கு சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?" என்று கூறியிருந்ததை பார்க்கமுடிந்தது.

இதை மேலும் உறுதிச் செய்ய, ஜீனியர் விகடன் அலுவலகத்தை தொடர்புக்கொண்டு கேட்டோம். அப்போது இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று நமக்கு உறுதிபடுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பும் இதே போன்று பல நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க :
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியு பிரிவில் அனுமதி என்று பரப்பப்படும் பழைய நியூஸ் கார்ட் !
முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சிங்கம் சிலையை எடிட் செய்து பரப்பும் நாதகவினர்!
முடிவு :
நம் தேடலில், “ஐ.நா-வுக்கு சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?” என்று வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை தான், சீமானை பார்த்து தான் காமராஜர் மதிய உணவை திட்டத்தை தொடங்கியதாக எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.