யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியில் உள்ள கல்யாண் ஜுவல்லரியில் குண்டு வெடித்ததாகவும் இதில் பலர் காயம் அடைந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ மற்றும் தகவல் குறித்து இணையத்தில் தேடியதில், கல்யாண் ஜுவல்லரியில் நேற்றைய தினம் (மே.2) ஏற்பட்ட விபத்து தொடர்பாக வெளியான செய்திகளைக் காண முடிந்தது.
’இந்தியா டுடே’ தளத்தில் வெளியான செய்தியில், கடையில் இருந்த AC ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்தது என்றும் வியாழக்கிழமை (மே.2) மாலை நிகழ்ந்த இவ்விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ’டைம்ஸ் நவ்’ தளத்தில் வெளியான செய்தியிலும் AC gas refilling-ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பெல்லாரி காவல் கண்காணிப்பாளர் இது குறித்துப் பேசுகையில், இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மோசமான நிலையில் உள்ளார். இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட செய்தியில் இருந்து கர்நாடகா பெல்லாரியில் உள்ள கல்யாண் நகைக்கடையில் ஏற்பட்டது விபத்து என்பது உறுதியாகிறது. இந்த விபத்தினை குண்டு வெடிப்பு எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று கர்நாடகா வந்து குண்டு வைப்பதாக பாஜக இணை அமைச்சர் சொன்ன பொய்!
இதற்கு முன்னர் பெங்களூர் இராமேஸ்வரம் கஃபே-வில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது பரப்பப்பட்ட பொய்யான செய்திகள் பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல் சலீம் கைது எனப் பரவும் தவறான செய்தி !
முடிவு :
கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியில் உள்ள கல்யாண் நகைக்கடையில் குண்டு வெடித்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த நகைக்கடையில் உள்ள AC-யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக நடந்த விபத்தைக் குண்டு வெடிப்பு எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
கர்நாடகா
பெல்லாரி
Kalyan jewellery ல் குண்டு வெடிப்பு
பலர் காயம் ???
உண்மையா pic.twitter.com/lyYYhuzPCH
— ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை (@VCankam) May 3, 2024