யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
H.ராஜா குறித்த கேள்விக்கு காளியம்மாள் அளித்த பதிலை, சீமான் பற்றிய கருத்து எனத் தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் சீமான் குறித்துப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் திமுகவினரால் பரப்பப்படுகிறது.
ஆமையனை பொளந்த காளியம்மாள் pic.twitter.com/WjKikNtYuE
அதில், “என்னுடன் உங்களுக்கு முரண் இருந்தாலோ அல்லது காளியம்மாள் இப்படிப் பேசியது சரியில்லை என்றாலோ? நீங்கள் என்னிடம் சொல்லலாம். நீங்கள் சொல்வது உண்மையில் தார்மீகமாக எனக்குப் பட்டால், நீங்கள் சொல்வது சரி. நான் செய்தது தப்புதான் எனச் சொல்லிவிட்டுச் செல்லலாம். இதனை எதுவும் அவர் செய்ய மாட்டார். இவர் வென்று முடிப்பதற்கான காரணம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த கட்சியைக் கேவலமாகப் பேசுவார். அவரது கட்சியில் இருப்பவர்களையே அவர் எவ்வளவு மோசமாக விமர்சித்துள்ளார் தெரியுமா?” எனக் கூறியுள்ளார்.
பிசுரு என்று பேசிய சீமானை மயிரா கூட மதிக்காத காளியம்மாள்..
#Seeman #NTK #SeemanFails pic.twitter.com/au0RRhSANc
@Seeman4TN
உண்மை என்ன?
காளியம்மாள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதைக் குறைவாகப் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து காளியம்மாள் நாதக-வில் இருந்து விலக இருப்பதாகச் செய்திகள் வெளியாகத் தொடங்கின. ‘விலகுவது போன்ற சூழல் இருக்கும்போது கட்டாயம் தெரிவிப்பேன்’ என காளியம்மாளும் தெரிவித்தார்.
இந்நிலையில்தான் சீமான் குறித்து காளியம்மாள் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அவ்வீடியோ குறித்துத் தேடியதில், 2023, அக்டோபர் மாதம் ‘Behindwoods O2’ யூடியூப் பக்கத்தில் இதன் முழு வீடியோ வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
அதில், 9வது நிமிடம் 55வது வினாடியில் ”தனிநபர் தாக்குதல் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாகச் சீமானின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து H.ராஜா பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
அதற்கு, ”அவர் (H.ராஜா) நாகரிகமாகவே பேச மாட்டார். எங்களை விடுங்கள், உயர் நீதிமன்றத்தையே என்ன சொன்னார்…? தனிநபர் தாக்குதல் மட்டுமின்றி, நல்ல சொல்லாடலையே அவரிடம் பார்க்க முடியாது” என H.ராஜா குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலும் சீமான் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்கிறேன்!🙏 pic.twitter.com/s3XDalu7lo
மேற்கண்ட தகவல்களிலிருந்து H.ராஜா குறித்த கேள்விக்கு காளியம்மாள் அளித்த பதிலை, சீமான் பற்றிய கருத்து எனத் தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
சீமான் குறித்து காளியம்மாள் பேசியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் திரித்துப் பரப்பப்படுகிறது. H.ராஜா குறித்த கேள்விக்குப் பதில் அளித்ததைத் திரித்துப் பரப்புகின்றனர்.
