YouTurn

’என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாராட்டிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எனப் பாஜகவினர் பரப்பும் பொய்.

’என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாராட்டிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி  எனப் பாஜகவினர் பரப்பும் பொய்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராகுலின் நடைபயண யாத்திரையின் பெயரைக் கூட மறந்து, திரு. ⁦அண்ணாமலை⁩ அவர்களின் "என் மண் என் மக்கள்" யாத்திரையை எம்பி ஜோதிமணி சிறப்பு என்கிறார். யாத்திரையின் விளைவு பலே.. 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கிய 'என் மண் என் மக்கள்' யாத்திரையை கடந்த மாதம் 27 அன்று முடித்துக்கொண்டார். இதன் நிறைவு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திருப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் "என் மண் என் மக்கள் மூலமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்" என்று கரூர் எம்பி ஜோதிமணி கூறுவது போன்ற வீடியோ ஒன்றை பாஜகவினர் பலரும் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



மேலும் அப்பதிவுகளில், ராகுலின் நடைபயண யாத்திரையின் பெயரை கூட மறந்து, அண்ணாமலையின்⁩ "என் மண் என் மக்கள்" யாத்திரையை ஜோதிமணி சிறப்பு என்கிறார் என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், எம்பி ஜோதிமணி இது குறித்து பேசிய முழு வீடியோ மாலைமுரசு யூடியூப் பக்கத்தில் மார்ச் 01 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் "தமிழ்நாட்டின் மொத்த வசூல் ராஜாக்களாக பிரதமரும், பாஜக மாநிலத் தலைவரும் செயல்படுகிறார்கள். என் மண் என் மக்கள் மூலமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். பாஜக நோட்டாவுடன் போட்டியிட்டு பலமாகத் தமிழ்நாட்டில் தோற்கும்" என்று பேசியிருந்ததைக் காண முடிந்தது.



இதில் ஜோதிமணி "என் மண் என் மக்கள் மூலமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்" என்று பேசியிருந்த வீடியோவின் சிறுபகுதியை மட்டும் எடுத்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

மேலும் இது குறித்து எம்பி ஜோதிமணியின் எக்ஸ் பக்கத்தையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில், "ஹலோ பாஜக ஐ டி விங், அதெப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம வழக்கம்போல பாதி வீடியோவ மட்டும் கட் பண்ணி, பரப்பிக்கிட்டு இருக்கீங்க. இதோ முழு வீடியோ. "பாஜக நோட்டோவோட போட்டியிட்டு தோற்கும்", என்னுடைய வீடியோவை பரப்பியதற்கு நன்றி" என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். 



இதன் மூலம் ஜோதிமணி என் மண் என் மக்கள் மூலமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று நக்கலாகக் கூறியதை உண்மை என்று நம்பி பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: ஒரு கழிவறை ரூ.90 லட்சமா ?.. கரூர் எம்.பி ஜோதிமணி பற்றிப் பரவும் வதந்தி !

இதற்கு முன்பும் எம்பி ஜோதிமணி குறித்து தவறாக செய்திகள் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாட்டில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாராட்டிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், அவர் பேசிய வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடுத்து பாஜகவினர் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க