யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜம்மு காஷ்மீரில் உள்ள “தாவி” (Tawi) நதியில் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை “தாமிரபரணியில் வெள்ளம்” என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆற்றில் தண்ணீர் பாய்ந்து கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது Jammu Links News என்ற ஊடகப்பக்கத்தில், "High Risk in Jammu: Tawi River Water Touches Bridges, Authorities Issue Flood Alert" என்ற தலைப்பில் பரவி வரும் அதே வீடியோ குறித்து ஆகஸ்ட் 26ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது. அதில் கனமழை காரணமாக ஜம்முவில் உள்ள தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிப் பார்த்தபோது, News18 ஹிந்தி ஊடகத்தில் ஆகஸ்ட் 26,2025 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் ஜம்முவில் பெய்து வரும் கனமழை பல இடங்களிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து, நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் நிரம்பி வழிந்து, நான்காவது தாவி பாலத்திற்கு அருகிலுள்ள சாலையை அடித்துச் சென்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Lake City Times ஊடகப்பக்கத்தில், "Jammu rivers swell again after fresh wet spell" என்ற தலைப்பில் இது குறித்து செப்டம்பர் 3, 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஜம்மு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாவி, உஜ், பசந்தர், செனாப் மற்றும் ரவி ஆறுகள் எச்சரிக்கை மற்றும் அபாய அளவை மீறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, ஜம்மு காஷ்மீரில் உள்ள “தாவி” (Tawi) நதியில் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை “தாமிரபரணியில் வெள்ளம்” என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
