YouTurn

போதை மருந்து கடத்தியவர் தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!

போதை மருந்து கடத்தியவர் தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சின்ன அண்ணி இயக்கும் படத்தை தயாரிப்பவர் போதை மருந்து கடத்துபவரா? 

X link | Archive link

விரிவான விளக்கம்

டெல்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற ஒரு கும்பலைக் கைது செய்தது. இக்கடத்தல் சம்பவத்தில் திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக-வை சேர்ந்தவருமான ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து திமுகவில் இருந்து சாதிக்கை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். 



Archive link

இந்நிலையில் சாதிக் தயாரிக்கும் ‘மங்கை’ என்னும் படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


X link


உண்மை என்ன?

சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள போஸ்டரில் ‘இயக்குநர் கிருத்திகா உதயநிதி’ என இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே போஸ்டரில் ‘மங்கை’ என்னும் படத்தின் தலைப்பிற்குக் கீழே ‘எழுத்து மற்றும் இயக்கம் குபேந்திரன் காமாட்சி’ என இருப்பதையும் காண முடிகிறது. 

மேற்கொண்டு மங்கை படத் தயாரிப்பு நிறுவனமான JSM Pictures’ எக்ஸ் பக்கத்திலும் இதே போஸ்டர் கடந்த (பிப்.) 13ம் தேதி பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. மேலும் அப்பதிவில் மங்கை திரைப்படத்தின் ’ஏலம்மா ஏலோ’ பாடலை இயக்குநர் கிருத்திகா வெளியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு தொடர்பாக ’மாலை மலர்’ தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டார்’ என்றுள்ளது. 



கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை, காளி போன்ற திரைப்படங்களையும் பேப்பர் ராக்கெட் என்னும் வலைத்தொடரையும் இயக்கியுள்ளார். அவரது தொழிலைக் குறிக்கும் வகையில் ‘இயக்குநர் கிருத்திகா’ எனக் குறிப்பிட்டதை, மங்கை திரைப்பட இயக்குநர் எனத் தவறாகப் பரப்புகின்றனர். 



கிருத்திகா உதயநிதியின் அடுத்த திரைப்படமான ஜெயம்ரவி நடிக்கும் " காதலிக்க நேரமில்லை" படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கிறது. 

மேலும் படிக்க : கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம் எனத் தவறான செய்தியைப் பரப்பிய சாட்டை துரைமுருகன் !

இதற்கு முன்னர் கிருத்திகா குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தேடப்படும் ஜாபர் சாதிக் தயாரிக்கும் மங்கை திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் படத்தின் பாடலைத்தான் வெளியிட்டுள்ளார். அப்படத்தை குபேந்திரன் காமாட்சி என்பவர்தான் இயக்கியுள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க