YouTurn

உதயநிதியை புறக்கணித்தாரா கே.என்.நேரு? தவெகவினர் பரப்பும் பொய்!

உதயநிதியை புறக்கணித்தாரா கே.என்.நேரு? தவெகவினர் பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் செங்கோல் மற்றும் வாள் கொடுத்து கௌரவித்தார் கே.என்.நேரு.

பரவிய செய்தி

நேரு vs உதயநிதி மோதல்? வேடிக்கும் உட்கட்சி பூசல்! அதிகார மோதல்


Link / Archive Link

விரிவான விளக்கம்

திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மேடையில் உதயநிதி நின்றுகொண்டிருக்க, ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருக்கு அமைச்சர் கே.என்.நேரு சால்வை அணிவிக்கிறார். ஆனால் உதயநிதிக்கு அணிவிக்கவில்லை. இந்த சில நொடி காட்சியை கொண்டு, கே.என்.நேரு உதயநிதியை மேடையிலே புறக்கணித்ததாகவும், திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகிவிட்டதாகவும் தவெகவைச் சேர்ந்தவர் பரப்பி வருகிறார்.

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’புதிய தலைமுறை’ வெளியிட்டிருந்த செய்தியைக் காணமுடிந்தது.



அதன்படி, திமுகவின் மாநாடு திருச்சி சிறுகனூரில் கடந்த மார்ச் 09ஆம் தேதி நடந்துள்ளது. அதில், அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் செங்கோல் மற்றும் வாள் கொடுத்து கௌரவித்தனர். அதன்பின்னர் தான் மேடையில் இருந்த மற்ற திமுக பிரமுகர்களுக்கு சால்வை அணித்து வரவேற்றனர் என்பதை இந்த செய்தியில் தெளிவாக காணமுடிகிறது. 


இதிலிருந்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு அமைச்சர் கே.என்.நேரு செங்கோல் வழங்கிய காட்சியை நீக்கிவிட்டு, மாநாட்டு மேடையில் மற்ற திமுக பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்த காட்சியை மட்டும் பதிவிட்டு உண்மை செய்தியை திரித்து பரப்புகிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.


முடிவு:


உதயநிதிக்கு அமைச்சர் கே.என்.நேரு செங்கோல் வழங்கும் காட்சியை நீக்கிவிட்டு, உதயநிதியை அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்தாக திரிக்கப்பட்ட தகவலை தவெகவினர் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க