யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சக திருநங்கைகளை விடுவிக்கக் கோரி போலீசாருடன் வாக்குவாதம் செய்து, திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
பரவிய செய்தி
இந்த திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினால் திருநங்கைக்கு ஏற்படும் கொடூர சம்பவம் நீங்களே பாருங்க..
@arivalayam @DMKITwing @mkstalin
#voiceofsarath | #tngovt | #tnpoliceofficial | #justice #dmkfailstn


விரிவான விளக்கம்
திருநங்கை ஒருவர் தீப்பற்றி எரியும் வீடியோவை பதிவிட்டு, ‘காவலர்கள் தான் அந்த திருநங்கை மீது தீ வைத்தார்கள், தமிழ்நாடு காவல்துறை செய்யும் இந்த கொடூரத்தை பாருங்கள்’ என்று சமூக வலைதளப் பிரபலமான ‘voice of sarath’ உள்ளிட்ட பலரால் பரப்பப்படுகிறது.
🥹 இந்த திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினால் திருநங்கைக்கு ஏற்படும் கொடூர சம்பவம் நீங்களே பாருங்க.. 🔥🔥 @arivalayam @DMKITwing@mkstalin#voiceofsarath | #tngovt | #tnpoliceofficial | #justice #dmkfailstn pic.twitter.com/HFQsszo5aS
தத்தி ஸ்டாலின் #திருட்டு_திமுக அரசு காவல்துறை மேல் நடவடிக்கை எடுக்குமா... மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துரையால் திருநங்கைக்கு கொடூரமான செயல் அந்த திருநங்கை வாக்குமுலம் குடுத்த பின் நடவடிக்கை எடுக்குமா. நடவடிக்கை எடுக்க @CMOTamilnadu கு முதுகெலும்பு இருக்கும் என்று… pic.twitter.com/aroqWmJONQ
உண்மை என்ன?
’திருநங்கை’, ’தீக்காயம்’ keywords கொண்டு இணையத்தில் தேடினோம். ‘தினமலர்’ செய்தித்தளத்தில் ஜனவரி 26ஆம் தேதி வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

அதில், ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஜார் வீதியில் மக்களிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்டதாக ஈஷா, சர்மிளா ஆகிய திருநங்கைகளை காவலர்கள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்த மற்ற திருநங்கைகள் காவல் நிலையத்திற்கு வந்து அவர்களை விடுவிக்கக் கோரி வாதம் செய்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கு வெளியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் இறங்கி வாக்குவாதம் செய்தனர். அதில் முத்தரசி என்ற திருநங்கை திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். முத்தரசியை மீட்டு போலீஸார் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தினகரன்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ‘ஸ்ரீவில்லிபுத்தூர் டி.மாகனசேரி பரமகுரு (45) என்பவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக சொல்லி இரண்டு திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அறிந்து திருநங்கைகள் காவல் நிலையத்தில் வந்து வாக்குவாதம் செய்ததாகவும், அதில் முத்தரசி என்ற திருநங்கை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர் தற்போது சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்’ தெரியவருகிறது.
மேலும் சாலையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதை காட்சிபடுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
முடிவு:
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சக திருநங்கைகளை விடுவிக்கக் கோரி போலீசாருடன் வாக்குவாதம் செய்து, திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததை திரித்து, திருநங்கை மீது காவலர்கள் தீ வைத்ததாக தவறாக பரப்புகிறார்கள்.