யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’மேடையில் என்ன பாடினீர்கள்?’ என்று அமைச்சர் சிறுவனிடம் கேட்கிறார். சிறுவன் ‘அச்சமில்லை’ என்று சொன்னதும், அப்பாடலையே பாடும் படி கூறுகிறார் அமைச்சர்.
பரவிய செய்தி
யோவ் @Anbil_Mahesh தவிட்டு தற்குறி..!
பாரதியார் எப்ப திருக்குறள் எழுதுனாரு அவன் சின்ன பையன் பாரதியார் வேஷம் போட்டு பாரதியாரோட பாடலை பாடுறான் உனக்கு பாரதியார தெரியல அது திருக்குறள் இல்லை பாரதியார் பாட்டுனு கூட தெரியலயா நீ எல்லாம் கல்வி துறை அமைச்சர் வேற விளங்கிரும் கல்வித்துறை.


விரிவான விளக்கம்
பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்கு பாரதியார் வேடம் அணிந்திருக்கும் சிறுவனிடம் பேசிவது போன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’அமைச்சர் அன்பில் மகேஷ் பாரதியார் வேடம் அணிந்திருந்த சிறுவனிடம் திருக்குறள் சொல்லச் சொன்னதாகவும், அதற்கு அந்த சிறுவன் பாடிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாரதியார் பாடலை அமைச்சர் திருக்குறள் என்று புரிந்துகொண்டதாகவும்’ பாஜக மற்றும் தவெக கட்சிகளின் ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.
யோவ் @Anbil_Mahesh தவிட்டு தற்குறி..!
பாரதியார் எப்ப திருக்குறள் எழுதுனாரு அவன் சின்ன பையன் பாரதியார் வேஷம் போட்டு பாரதியாரோட பாடலை பாடுறான் உனக்கு பாரதியார தெரியல அது திருக்குறள் இல்லை பாரதியார் பாட்டுனு கூட தெரியலயா நீ எல்லாம் கல்வி துறை அமைச்சர் வேற விளங்கிரும் கல்வித்துறை 💦 pic.twitter.com/Ox8SYMdmnS
யோவ் @Anbil_Mahesh தவிட்டு தற்குறி..!
பாரதியார் எப்ப திருக்குறள் எழுதுனாரு அவன் சின்ன பையன் பாரதியார் வேஷம் போட்டு பாரதியாரோட பாடலை பாடுறான் உனக்கு பாரதியார தெரியல அது திருக்குறள் இல்லை பாரதியார் பாட்டுனு கூட தெரியலயா நீ எல்லாம் கல்வி துறை அமைச்சர் வேற விளங்கிரும் கல்வித்துறை 💦 pic.twitter.com/ddPaeypvzV
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Anbil Mahesh Forever’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோ இருப்பதைக் காணமுடிகிறது.
பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரதியார் வேடம் அணிந்திருக்கும் அந்த சிறுவனை அழைத்து “மேடையில் பாரதியார் என்ன பேசுனீங்க, பாரதியார் திருக்குறள் சொன்னீங்களா?” என்று கேட்கிறார்.
அதற்கு அந்தச் சிறுவன் “அச்சமில்லை” என்று கூறுகிறார். அதற்கு “அச்சமில்லையா, சரி சொல்லுங்க” என்று பாரதியார் எழுதிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடலையே கூறுமாறு அமைச்சர் சொல்கிறார். இதுதான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதிலிருந்து, அமைச்சர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடலையே பாடும் படி அச்சிறுவனிடம் கேட்கிறார் என்று தெளிவாக தெரிய வருகிறது.
முடிவு:
நடந்த உண்மை உரையாடலைத் திரித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பாரதியார் வேடம் அணிந்திருக்கும் சிறுவனை திருக்குறள் சொல்லும்படி கேட்டதாகவும், அந்த சிறுவன் பாடிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாரதியார் பாடலை அமைச்சர் திருக்குறள் என்று நினைத்துவிட்டதாகவும் பாஜக மற்றும் தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பி வருகிறார்கள்.