YouTurn

கண்ணகி நகர் கார்த்திகாவை திமுக அரசு கௌரவிக்கவில்லையா? உண்மை என்ன?

கண்ணகி நகர் கார்த்திகாவை திமுக அரசு கௌரவிக்கவில்லையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீரர்கள் போட்டி முடிந்து சென்னை திரும்பி அன்றே அவர்களை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதல்வர்.

பரவிய செய்தி

படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கௌரவிக்கும் கட்சியினர் மத்தியில்.. விளையாட்டில் சாதித்தவர்களுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்கும் கட்சி தான் தவெக..


Link / Archive Link

விரிவான விளக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில், இந்திய மகளிர் அணி கபடியில் தங்கம் வென்றது. இந்த அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் சிறப்பாக செயல்பட்டார். கண்ணகி நகர் போன்ற பின்தங்கிய பகுதியிலிருந்து ஆசிய இளையோர் போட்டி வரை சென்று சாதித்ததால் கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

 

இந்நிலையில், ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை திமுக அரசு உரிய வகையில் கௌரவிக்கவில்லை என்று தவெக ஆதரவாளர்‌ சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.


#தவெக ❤️❤️ https://t.co/Y2nYF7dfNU pic.twitter.com/I6zvJQHxYi

— Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) October 29, 2025

 

உண்மை என்ன?

 

‘கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவை பாராட்டிய முதல்வர்’ என்ற keywords தேடுகையில், தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.


 

அதில், ‘ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா ரமேஷ்-க்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாக’ புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

 

மேலும் தேடியதில், ‘Asianet News தமிழ்’ செய்தித்தளத்தில் அக்டோபர் 26ஆம் தேதி வெளியான செய்தியில், ‘ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள்  இந்திய ஆண்கள் அணியும்,  மகளிர் அணியும்  தங்கம் வென்றது.  இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கும், ஆண்கள் அணியில்  திருவாரூரைச் சேர்ந்த  அபினேஷ் மோகன்தாஸ்-க்கும் ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊக்கத்தொகை அவர்கள் போட்டி முடிந்து சென்னை திரும்பி அன்றே அவர்களை நேரில் அழைத்து முதல்வர் வழங்கியதாகவும் தெரியவருகிறது.


 

இதிலிருந்து, ஆசிய இளையோர் போட்டியில் சாதித்த கண்ணகி நகர் கார்த்திகாவை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது.

 

முடிவு:

 

ஆசிய இளையோர் போட்டியில் சாதித்த கண்ணகி நகர் கார்த்திகாவை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியதை மறைத்து, திமுக அரசு கார்த்திகாவை கௌரவிக்கவில்லை என்று தவறான தகவலை பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.