YouTurn

தமிழ்நாட்டின் முதல் தலித் கல்வியமைச்சர் ராஜ்மோகனா? உண்மை என்ன?

தமிழ்நாட்டின் முதல் தலித் கல்வியமைச்சர் ராஜ்மோகனா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2016 அதிமுக ஆட்சியில் பெஞ்சமின் பள்ளிக்கல்வி துறை அமைச்சராகவும், 2024 திமுக ஆட்சியில் கோவி.செழியன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளனர். இவர்களுகும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

பரவிய செய்தி

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ஒரு தலித் தலைவர் கல்வி அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல்முறை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்மோகனை முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் கல்வியமைச்சராக நியமித்திருக்கிறார். 


image.png


X Link / Archive Link 


விரிவான விளக்கம்

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜய் தலைமையில் தவெக ஆட்சிபொறுப்பேற்றது.  கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டவர் அமைச்சர்களுக்கு தற்போது இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ’இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ஒரு தலித் தலைவர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகன் தான் இந்தியாவின் முதல் தலித் கல்வி அமைச்சர்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் இதற்கு முன்னர் அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிறார்களா? என்று இணையத்தில் தேடினோம். 2016 மே மாதம் ‘புதிய தலைமுறை’ சேனல் யூட்யூப் தளத்தில் வெளியான செய்தியைக் காணமுடிந்தது.



அதன்படி, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியமைத்த போது, பெஞ்சமின் அவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையும் விளையாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டின் முதல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தது பெஞ்சமின் அவர்கள் தான். 



அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் 2024 செப்டம்பர் மாதம் கோவி.செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர்தான் தமிழ்நாட்டின் முதல் தலித் உயர்கல்வித்துறை அமைச்சராவார். 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, தற்போது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுபேற்றிருக்கும் ராஜ்மோகன் முதல் தலித் கல்வியமைச்சர் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.


முடிவு:


இந்தியாவின் முதல் தலித் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தான் என தவெக ஆதரவாளர்களால் தவறாக பரப்பப்படுகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க