YouTurn

தமிழ்நாட்டில் போக்ஸோ வழக்குகளின் Conviction Rate 3 சதவீதத்திற்கும் குறைவா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் போக்ஸோ வழக்குகளின் Conviction Rate 3 சதவீதத்திற்கும் குறைவா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

போக்ஸோ வழக்குகளிலும், பெண்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகளிலும் தமிழ்நாட்டில் Conviction Rate என்பது 27.5 சதவீதமாகும்.

பரவிய செய்தி

‘2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 6968 POCSO வழக்குகள் பதிவாகியுள்ளது. அவற்றில் 3 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு (Conviction Rate) குற்றவாளி தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்’ - தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா.


YouTube Link

விரிவான விளக்கம்

’ஆகாயம் தமிழ்’ என்ற யூட்யூப் தளத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, ‘2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 6968 POCSO வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் அவற்றில் 3 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு (Conviction Rate) குற்றவாளி தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று பேசினார்.



உண்மை என்ன?


தமிழ்நாட்டில் போக்ஸோ வழக்குகளின் Conviction Rate குறித்து இணையத்தில் தேடினோம். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்த தரவுகளை காணமுடிந்தது.


அதன்படி, 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 6968 குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் (Crimes against Children) பதியப்பட்டுள்ளது. இதில் எல்லாமே போக்ஸோ வழங்குகள் என்று அர்த்தமில்லை. முதலில் முஸ்தபா குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் எல்லாம் போக்ஸோவின் கீழ் வரும் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை வேலைகளில் சட்டவிரோதமாக ஈடுபடுத்துவது, குழந்தைகளை கடத்தல் செய்வது போன்ற குற்றங்கள் கூட ’Crimes against Children’ என்ற வகைமையின் கீழ் தான் வரும்.


மேலும், மேற்கூறிய 6968 வழக்குகளில் 962 வழக்குகளுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் Conviction Rate என்பது 27.5 சதவீதமாகும். 



அதேபோல், தமிழ்நாட்டில் மொத்தம் 20 Fast Track Special Courts (FTSC) நீதிமன்றங்கள் உள்ளது. இதில் exclusive POCSO (e-POCSO) என்று சொல்லப்படும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களும் அடங்கும். போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களில் போக்ஸோ வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். ஆனால் ’FTSC’ நீதிமன்றங்களில் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் குற்ற வழங்குகளும் விசாரிக்கப்படும். மேற்குறிப்பிட்ட இந்த 20 சிறப்பு நீதிமன்றங்களில் 2025ஆம் ஆண்டின் இறுதியில் 8334  வழக்குகள் நிலுவையில் இருந்திருக்கிறது. இந்த நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் Conviction Rate 2025ஆம் ஆண்டு 27.51 சதவீதமாக இருந்திருக்கிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, போக்ஸோ வழக்குகளிலும், பெண்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகளிலும் தமிழ்நாட்டில் Conviction Rate என்பது 27.5 சதவீதமாக இருப்பது தெரிய வருகிறது.


முடிவு:


குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டின் ‘Conviction Rate’ 3 சதவீதத்திற்கும் குறைவு என்று தவறான தகவலை பரப்பி வருகிறார் தமிழ்நாடு முஸ்லீம் கட்சித் தலைவர் முஸ்தபா.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க