YouTurn

திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 1 லட்சம் மட்டுமே நிவராணம் வழங்கப்பட்டதா?

திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 1 லட்சம் மட்டுமே நிவராணம் வழங்கப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 25 லட்சம் முதல் ஒரு கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டதற்கான செய்தி ஆதாரங்கள் இருக்கின்றன.

பரவிய செய்தி

திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் இருக்கும் போது காவலர்கள் உயிரிழந்தால் ஒரு லட்சமும், காயமடைந்தால் 50 ஆயிரம் மட்டுமே நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தவெக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலருக்கு 30 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது.


image.png


Link / Archive Link 


விரிவான விளக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த தலைமை காவலர் மகேஷ்குமார், மணற்கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வரும்போது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.  உயிரிழந்த காவலருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.


இந்த செய்தியை பதிவிட்டு, ’முந்தைய திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ஒரு லட்சமும், காயமடைந்தால் 50 ஆயிரம் மட்டுமே நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தவெக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலருக்கு 30 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது’ தவெக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


அதிமுக மற்றும் திமுக ஆட்சி செய்த ஆண்டுகளில் பணியில் இருக்கும்போது வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்த காவலர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி பற்றிய விவரங்களைத் தேடினோம்.



2025 ஆகஸ்ட் மாதம் ‘புதிய தலைமுறை’ ஊடகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியின் படி, ‘திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு அப்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்தது’ தெரியவருகிறது.



2024 அக்டோபர் மாதம் ‘புதிய தலைமுறை’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் சத்தியமூர்த்தி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அப்போதைய முதல்வர் ஸ்டாலின் 25 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


அதேபோல், 2020 ஆகஸ்ட் மாதம் ’Deccan Herald’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ’சுப்பிரமணியன் என்கிற சிறப்பு படை காவலர் சரித்திர பதிவேடு ரௌடியை கைது செய்ய போன போது, அந்த ரௌடியால் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 50 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்’ என்று தெரிய வருகிறது.


இதிலிருந்து திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 25 லட்சம் முதல் ஒரு கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. 


முடிவு:


திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு வெறும் ஒரு லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டதாக தவெக ஆதரவாளர்களால் தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க