YouTurn

நாம் தமிழர் போராட்டத்தால் மீண்டும் ‘தமிழ்நாடு’ என்று அரசு பேருந்துகளில் எழுதப்பட்டதா?

நாம் தமிழர் போராட்டத்தால் மீண்டும் ‘தமிழ்நாடு’ என்று அரசு பேருந்துகளில் எழுதப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படங்கள் எல்லாம் 2024,2025 ஆகிய ஆண்டுகளிலே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது

பரவிய செய்தி

சாதித்து காட்டிய #நாம்தமிழர்கட்சி

அரசு போக்குவரத்து கழகம் என்று இருந்ததை ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என மாற்றம்.



X Link / Archive Link



X Link / Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் வெறுமனே ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்று தான் எழுதப்படுகிறது. அதில் ‘தமிழ்நாடு’ என்று சேர்த்து எழுதப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியினர் சமீபத்தில் பல இடங்களில் போராடி வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக ‘தமிழ்நாடு’ என்று எழுதப்படாத பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று எழுதப்பட்டிருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு, நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தின் விளைவாக பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று அரசு எழுத தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன? 


பரப்பப்படும் புகைப்படங்களை ‘Reverse Image Search’ முறையில் தேடினோம். அப்போது Facebook, Instagram, Reddit ஆகிய சமூக வலைதளங்களில் ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்ற எழுதப்பட்ட பேருந்துகளின் வெவ்வேறு புகைப்படங்களை காணமுடிந்தது. 



மேலும் இந்த புகைப்படங்கள் எல்லாம் 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.


இதிலிருந்து, பரப்பப்படும் இந்த புகைப்படங்கள் பழையது என்பது தெரிய வருகிறது.  ‘நாதக’ நடத்திய போராட்டத்தால் தான் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சேர்க்கப்பட்டது என்பதற்கான எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லை. 



மேலும், கடந்த அதிமுக ஆட்சியிலிருந்தே புதிதாக வாக்கப்பட்ட பல அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதை நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். 


முடிவு: 


நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று மீண்டும் எழுத தொடங்கியிருப்பதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும். பரப்பப்படும் புகைப்படங்கள் எல்லாம் ஓராண்டுக்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது தான். 

சுருக்கமாக




பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க