YouTurn

தவெகவில் இணைந்த இஸ்லாமியர்கள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

தவெகவில் இணைந்த இஸ்லாமியர்கள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இஸ்லாமிய மதகுரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ என்ற கன்னட அமைப்பை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பரவிய செய்தி

TVK வில் இணைந்த தொபுள் கொடி உறவுகள்.


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

இஸ்லாமியர்கள் சிலர் மஞ்சள் சிவப்பு நிறங்கள் கொண்ட துண்டுகளுடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு பின்னால், அரபு மொழியில் எழுதப்பட்ட வாசகம் இருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘கணிசமான இஸ்லாமியர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டதாக’ பரப்பப்படுகிறது.

உண்மை என்ன:


பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியதில், ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது. 


image.png


அந்த புகைப்படத்தையொட்டி எழுதப்பட்டிருந்த பதிவில், ‘இஸ்லாமிய மதகுருவான அமீர்-இ-ஷரியத் சையத் சாகிர் அகமது சாப் ரஷாதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ அமைப்பின் தலைவர் டி.ஏ. நாராயண கவுடாவை சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ என்பது கர்நாடகாவில் கன்னட மொழி மற்றும் இனத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரக்கூடிய அமைப்பாகும். 

மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, இந்த புகைப்படம் கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பதும், அந்த புகைப்படத்தில் இருக்கும் மஞ்சள் சிவப்பு துண்டு தவெக கட்சியின் கொடி அல்ல, ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ என்ற அமைப்பினுடையது என்பதும் தெளிவாக தெரியவருகிறது. 


முடிவு:


கார்நாடகாவில் இஸ்லாமிய மதகுரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ என்ற கன்னட அமைப்பின் தலைவரை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தவெகவில் இஸ்லாமியர்கள் இணைந்ததாக தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க