யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியின் கட்டிடம் இடிந்து குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்து நரேஷ் மீனா தலைமையில் நடைபெற்ற தீப்பந்த ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
I love Mahadev ,
உத்திரப்பிரதேசத்தில் "ஐ லவ் மகாதேவ்" என்று ஒன்றுபட்ட ஹிந்துக்கள்.
"யோகி போலீசே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் முன்னேறு". என்ற கோஷத்துடன் ஹிந்துக்கள் பேரணி நடைபெற்றது.

விரிவான விளக்கம்
இரவு நேரத்தில் ஒரு நகரத்தின் தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையில் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘இந்த ஊர்வலம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது என்றும் இந்த ஊர்வலத்தின் போது மக்கள் ”I love Mahadev” என்றும் "யோகி போலீசே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் முன்னேறு" என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும் இந்துத்துவ ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
I ❤️ Mahadev ,
உத்திரப்பிரதேசத்தில் "ஐ லவ் மகாதேவ்" என்று ஒன்றுபட்ட ஹிந்துக்கள்.
"யோகி போலீசே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் முன்னேறு". என்ற கோஷத்துடன் ஹிந்துக்கள் பேரணி நடைபெற்றது.#Jai_Bharat pic.twitter.com/Lbmfl6OVMy
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘nareshmeena_update’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோவை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தவர்கள் பலரும் ‘Naresh Meena’ என்ற பெயரை குறிப்பிட்டிருப்பதை காணமுடிந்தது.

இந்த ‘Naresh Meena’ என்ற keywords கொண்டு சமூக ஊடகங்களில் தேடிய போது இந்த ’நரேஷ் மீனா’வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதில் எழுதப்பட்டிருந்த குறிப்பில், ‘ஜலவார்-பிப்லோடி விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக தனது மகன் ‘அனிருத்’ தலைமையில் ‘தீப்பந்த ஊர்வலம்’ ஜெப்பூர் நகரத்தில் நடத்தப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
’ஜலவார்-பிப்லோடி விபத்து’ குறித்து தேடியதில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் மாவட்டத்தில் கடந்த ஜூலை 25 அன்று அரசு பள்ளியின் கட்டிடம் இடிந்து 7 குழந்தைகள் இறந்தனர், மேலும் 28 குழந்தைகள் காயமடைந்தனர். இதனை கண்டித்து நரேஷ் மீனா என்பவர் 14 உண்ணாவிரதம் இருந்தார். மேலும் அவரது மகனான சிறுவன் அனிருத் மீனாவுடன் இணைந்து தீப்பந்தம் ஏந்தி ஜெப்பூர் நகரத்தில் ஊர்வலம் சென்றனர்.

மேலும், பரப்பப்படும் வீடியோவில் ஊர்வலம் குறிப்பிட்ட இடத்தை கடக்கும் போது, ‘Kamla Tower’ ‘unacademy centre’ ஆகிய கட்டிடங்களைக் காணமுடிகிறது. ‘Google Map’ பயன்படுத்தி ஜெய்பூர் நகரத்தில் தேடியபோது, ஜெய்பூரில் ‘150 Gopalpura Bypass Rd’ என்ற இடத்தில் இந்த கட்டிடங்கள் இருப்பதைக் காணமுடிந்தது.

மேலும் ”I love Mahadev” மற்றும் யோகி ஆதித்யநாத்-க்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து இணையத்தில் தேடியதில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று உத்தர பிரதேசத்தில் அம்மாநில போலீஸ்க்கு ஆதரவாக இவ்வாறாக கோஷங்கள் எழுப்பட்ட நிகழ்வைக் காணமுடிகிறது.
सुनो...
मुगलों की चंद मुट्ठी भर औलादों
आज मैंने सिर्फ शुरुआत की है
अगर महादेव के 100 करोड़ भक्त सड़कों पे
उतर आये तो अरब में भी छुपने की जगह न मिलेगी🖐️
I Love महादेव -
I Love @myogiadityanath
I Love @Uppolice ✊
हिन्दुओं पंहुचा दो... उन दंगाइयों तक ये… pic.twitter.com/AXXLD2IV7G
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியின் கட்டிடம் இடிந்து குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்து நரேஷ் மீனா தலைமையில் நடைபெற்ற தீப்பந்த ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியின் கட்டிடம் இடிந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற தீப்பந்த ஊர்வலத்தின் வீடியோவை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு ஆதரவாக இந்துகள் ஊர்வலம் நடத்தியதாக தவறாக பரப்புகிறார்கள்.