YouTurn

வணிக வரி என்றாலே GST வரிதான் என்று பரப்பப்படும் தவறான கருத்து!

வணிக வரி என்றாலே GST வரிதான் என்று பரப்பப்படும் தவறான கருத்து!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வணிக வரி என்றாலே GST மட்டுமே அல்ல, GST அல்லாத (Non GST) வரிகளும் அடக்கம் என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சகத்தின் ஆவணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

தமிழக முதல்வரோ ஜிஎஸ்டி அமல்படுத்தபட்ட பிறகு தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து விட்டது என புலம்பி வருகிறார்,
அமைச்சர் மூர்த்தியோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2020-21ல் ₹85,867 கோடியாக இருந்த வணிகவரி 2024-25ல் ₹1,38,120 ஆக உயர்ந்து உள்ளது என பெருமை பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வணிகவரி =ஜிஎஸ்டி.
பொய்யும் புரட்டும் பேசியே நான்காண்டு காலம் ஆட்சியை நடத்தி விட்டது திமுக.
இதையெல்லாம் Fack Check பண்ணலாமே @youturn_in @tn_factcheck ?


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று சட்டசபையில் விவாதத்திற்கு பதிலளிக்கையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, “மாநில அரசின் வரி வருவாயில் வணிக வரித்துறை வாயிலாக, 71.6 சதவீதமும், பதிவுத்துறை வாயிலாக, 15.4 சதவீதம் பெறப்படுகிறது... தி.மு.க ஆட்சிக்கு வந்து பின்னர் கடந்த  நான்கு ஆண்டுகளில் வணிக வரித்துறை 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது” என்று பேசினார்.


இந்நிலையில், தமிழ்நாடு பாஜகச் சேர்ந்த P.S.செல்வக்குமார் என்பவர், ‘தமிழக முதல்வரோ ஜிஎஸ்டி அமல்படுத்தபட்ட பிறகு தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து விட்டது என புலம்பி வருகிறார்' என்றும் ‘கடந்த நான்காண்டுகளில் மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.5.08 லட்சம் கோடி என்று சொல்லாமல், அமைச்சர் மூர்த்தி வணிகவரி என்று சொல்கிறார். ஜிஎஸ்டி வரி என்பதை திரித்து வணிகவரி மாற்றிக் கூறுவதாக’ தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரப்பிவருகிறார். 



உண்மை என்ன?


நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் வணிக வரி பற்றி தேடிய போது, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘வணிக வரிகள் - 2025-26:Policy Note’ என்ற ஆவணத்தை காணமுடிந்தது. 


image.png


இந்த ஆவணத்தில் கடந்த 2020-2021 முதல் 2024-2025 நிதியாண்டு வரையில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வசூலிக்கப்பட்ட வரிகள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் 2020-21 நிதியாண்டில் வணிக வரி, மத்திய அரசால் வழங்கப்படும் GST இழப்பீட்டு தொகையை சேர்க்காமல் ரூ.85,867.86 கோடியாக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் வணிக வரி ரூ.1,38,120.10 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது. 



வணிக வரிப் பிரிவுகளில் Non GST வரி என்ற தனிப் பிரிவு இருப்பதை காணமுடிகிறது. பெட்ரோல், மது போன்ற சரக்குகளில் இருந்து ஈட்டப்படும் வருவாய் இந்த GST அல்லாத (Non GST) வரிகள் மூலமாகத்தான் ஈட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு GST அல்லாத (Non GST) வரிகளை வசூலிக்க மாநில அளவில் சட்டங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பெட்ரோல், மதுபானத்திற்கு TNVAT Act - 2006, CST Act - 1956 ஆகிய சட்டங்களின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது.


மேலும், மாநில வணிக வரி வருவாயில் GST அல்லாத (Non GST) வரிகள், மதிப்புக் கூட்டு வரி (VAT), State GST (SGST),  Interstate GST (IGST),  GST இழப்பீடுத் தொகை (GST Compensation) ஆகிய பிரிவுகள் இருக்கின்றன. இவ்வற்றுள், 2024-2025 நிதியாண்டில், GST அல்லாத (Non GST) வரிகளின் மூலமாக மட்டும் 44.96 சதவீத வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து வணிக வரி என்றாலே GST மட்டுமே அல்ல, GST அல்லாத (Non GST) வரிகளும் அடக்கம் என்பது தெளிவாகிறது. மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தபட்ட பிறகு தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து விட்டது என யாரும் சொல்லவில்லை. மாறாக, ’தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு அதிகமான வரி செலுத்தக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை’ என்று பேசப்பட்டு வருகிறது.


முடிவு:


வணிக வரி என்றாலே GST மட்டுமே என்ற தவறான புரிதலில் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த P.S.செல்வகுமார் தவறான கருத்துகளை பரப்பிவருகிறார். ஆனால், GST அல்லாத (Non GST) வரிகளும் வணிக வரிகளில் அடங்கும் என்பதும், GST அல்லாத (Non GST) வரிகளின் மூலம்தான் அதிகமான வருவாய் ஈட்டப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.