யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்வது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேச்சாளர்களாக கலந்துகொண்டிருந்த இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சிறிய பதிவிட்டு, ‘வெளிமாநில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதாக’ தவெக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. வெளி மாநில செய்தி சேனலில் அடிவாங்கிய திமுக நிர்வாகி pic.twitter.com/QLf00q67V3
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Loksatta’ என்ற மராத்தி செய்தித்தளத்தில் இது குறித்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ’YO YO TV என்ற தெலுங்கு செய்தித்தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் ஒருவொரு ஒருவர் தாக்கிக் கொண்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. விவாத நிகழ்ச்சியில் அவர்கள் அணிந்திருக்கும் துண்டுகளில் உள்ள நிறங்களிலிருந்தே அவர்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்பது தெரிகிறது.

பரப்பப்படும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள Time Frame கொண்டு பார்க்கும் போது இந்த நிகழ்வு நவம்பர் 18ஆம் தேதியன்று இரவு 7.45க்கு நடந்ததாக தெரிகிறது.

இதே செய்தியை ’ABP நாடு’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பீகார் மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாக்குத் திருட்டே காரணம் என்று காங்கிரஸ் பேச்சாளர் கூறினார். பாஜக தரப்பில் பேசிய நபர் இதனை மறுத்து ’நீதி வென்றது’ என்று கூறியதும் காங்கிரஸ் பேச்சாளர் மேசை மீது ஓங்கி அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக பேச்சாளர்கள் ஒருவரை தாக்கிக்கொள்கிறார்கள்’ என்று தெரிய வருகிறது.
இதிலிருந்து, இந்த வீடியோவில் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்வது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்ளும் வீடியோவை, திமுக நிர்வாகி வேறு மாநில விவாத நிகழ்ச்சியில் அடிவாங்குவதாக தவறாக பரப்பப்படுகிறது.
